பதிவு செய்த நாள்
20 டிச2016
23:38

புதுடில்லி : ‘‘மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து, ஜவுளித் துறையைச் சேர்ந்த, 5 லட்சம் தொழிலாளர்களுக்கு, வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டு உள்ளன; அவர்களுக்கு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளவும், பயிற்சி அளிக்கப்படுகிறது,’’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.
அவர், ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் விழாவில் பங்கேற்று, சிறப்பாக செயல்பட்டோருக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது: ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், வரும் ஆண்டில், சிறப்பாக செயல்படுவோருக்கு விருது வழங்கப்படும். ஜவுளித் துறையினர், சர்வதேச கண்ணோட்டத்துடன் அணுகி, சந்தைப்படுத்துதல் அல்லது தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்த முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில், ஆடைகள் துறையின் பங்களிப்பு, 47 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்., – நவ., வரையிலான காலத்தில், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, 10.86 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|