பதிவு செய்த நாள்
20 டிச2016
23:40

மும்பை : டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து, அக்., 24ல், சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் இருந்து, அவர் நீக்கப்பட்டார்.
அத்துடன், இதர டாடா நிறுவனங்களில் இருந்தும், அவரை நீக்க, சிறப்பு பொதுக்குழு கூட்டங்களுக்கு, டாடா சன்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், சைரஸ் மிஸ்திரி, நேற்று முன்தினம், அனைத்து டாடா நிறுவனங்களின் இயக்குனர் பதவியில் இருந்தும் விலகினார். டாடா குழுமத்தின் மாண்பை காப்பற்ற, வெளியில் இருந்து போராடப் போவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டாடா குழுமம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்தடுத்து நடைபெற உள்ள, டாடா நிறுவனங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டங்களில், பங்கு முதலீட்டாளர்களின் ஆதரவு தனக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து, வேறு வழியின்றி, சைரஸ் மிஸ்திரி தாமாகவே பதவி விலகியுள்ளார்’ என, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|