பதிவு செய்த நாள்
20 டிச2016
23:42

சென்னை : குறு, சிறு தொழில் நிறுவனத்தினர், கடன் கோரி அளிக்கும் மனுக்களை, வங்கியின் பரிசீலனைக்கு, ஆன்லைன் மூலம் அனுப்பும் வசதிக்காக, மத்திய அரசும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் ஒப்பந்தம் செய்துள்ளன.
மத்திய அரசின், தேசிய சிறு தொழில் நிறுவனம், அனைத்து மாநிலங்களிலும், கிளை அலுவலகங்களை வைத்துள்ளது. அதன் மூலம், குறு, சிறு, தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று தரப்படுகிறது. அந்த மனுக்கள் சேகரிக்கப்பட்டு, மொத்தமாக, வங்கிகளுக்கு அனுப்புவது வழக்கம். அதை மாற்றி, இணையதளம் மூலம் அனுப்பும் மையங்கள், நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. சென்னை, அண்ணாசாலை கிளையில், ஆன்லைன் மையம் துவங்கப்பட்டது. அதை, அந்நிறுவன தேசிய தலைவர் ரவீந்திரநாத் துவக்கி வைத்தார். அதில், மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவன சங்கத் தலைவர் பாபு, பெண்கள் அமைப்பின் தலைவர் மங்களம் ஆகியோர் பங்கேற்றனர். தொழில் நிறுவனங்களிடம் பெறும் மனுக்களை, ஆன்லைனில் பரிசீலனைக்காக அனுப்ப, இதுவரை, நாட்டில், 33 வங்கிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. 34வதாக, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில், தேசிய சிறு தொழில் நிறுவன தேசிய தலைவர் ரவீந்தரநாத், வங்கியின் மேலாண் இயக்குனர், எச்.எஸ். உபேந்திரா காமத்தும் கையெழுத்திட்டனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|