பதிவு செய்த நாள்
21 டிச2016
23:47
சென்னை : ரெனோ நிறுவனம், ‘க்விட்’ மாடல் கார்களை, தென்னாப்ரிக்கா, பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ரெனோ நிறுவனத்திற்கு, சென்னையில், நிஸான் நிறுவனத்துடன் இணைந்த, கார் தொழிற்சாலை உள்ளது. அந்த ஆலை, ஆண்டுக்கு, 4.80 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறனுடையது. ரெனோ, இந்தியாவில், 2015 செப்டம்பரில், ‘க்விட்’ மாடல் காரை அறிமுகம் செய்தது. அந்த காருக்கு, வாடிக்கையாளர்களிடம், நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து, க்விட் காரை, தென்னாப்ரிக்கா, பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, ரெனோ முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி சுமித் சாவ்னே கூறியதாவது:எங்கள் நிறுவனம், இந்தியாவில் இருந்து, ‘க்விட்’ காரை, பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது, அந்த கார், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து, தென்னாப்ரிக்கா, பூடான், வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு, 2017ல் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|