கிரா­மங்­களில் இல­வச மொபைல் போன் இணைய சேவைகிரா­மங்­களில் இல­வச மொபைல் போன் இணைய சேவை ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.83 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.83 ...
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலை; கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2016
23:50

மும்பை : ‘கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களில், கடந்த நிதி­யாண்டில், 1.08 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வா­கி­யுள்­ளன’ என, ‘கேர்’ தர நிர்­ணய நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்: பல்­வேறு துறை­களைச் சேர்ந்த, 2,122 கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வேலை­வாய்ப்பு குறித்து, அவற்றின் நிதி­யாண்டு அறிக்­கை­களின் அடிப்­ப­டையில், ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், அந்­நி­று­வ­னங்கள், 2015 – 16ம் நிதி­யாண்டில், 1.08 லட்சம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. அனைத்து துறை­க­ளிலும், பர­வ­லான வேலை­வாய்ப்பு வளர்ச்­சியை தெளி­வாக அறிய முடி­யாத போதிலும், சேவை சார்ந்த தொழில்கள், நுகர்வோர் சாத­னங்கள் ஆகிய துறை­களில், வேலை­வாய்ப்­புகள், குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை கண்­டுள்­ளன.
பணி­யாளர் நிய­ம­னத்தை பொறுத்­த­வரை, கடந்த நிதி­யாண்டில், அப்­பி­ரிவு முந்­தைய ஆண்­டு­களை விட, அதிக வளர்ச்சி கண்­டுள்­ளது. இதற்கு முன், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களில், 2013 – 14 மற்றும் 2012 – 13ம் நிதி­யாண்­டு­களில், முறையே, 46 ஆயிரம் மற்றும் 84 ஆயிரம் என்ற அள­விற்கே, வேலை­வாய்ப்­புகள் உரு­வா­கி­யி­ருந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போது, மத்­திய அரசின் பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கையால், அனைத்து துறை­க­ளிலும் மந்­த­நிலை காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக, நடப்பு 2016 – 17ம் நிதி­யாண்டில், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்­புகள் உரு­வா­வது குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
கடந்த, 2013 – 14 மற்றும் 2014 – 15ம் நிதி­யாண்­டு­களில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியின், வளர்ச்சி விகி­தத்­திற்கு நிக­ராக, புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வா­க­வில்லை; கடந்த நிதி­யாண்டில், இது­போன்ற நிலை இல்லை. கடந்த நிதி­யாண்டில், 1,078 நிறு­வ­னங்கள், தலா, 3,000 பேரையும், ௨௦ நிறு­வ­னங்கள், அதற்கு மேற்­பட்­டோ­ரையும் பணிக்கு அமர்த்­தி­யுள்­ளன. ஆறு நிறு­வ­னங்­களில், 10 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ளனர்.
கடந்த சில ஆண்­டு­க­ளாக, முத­லீ­டுகள் குறைந்­ததால், பொறி­யியல் மற்றும் அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­களில் வேலை­வாய்ப்­புகள் குறைந்­தி­ருந்­தன. கட்­டு­மான துறையில், அதிக திறன் தேவைப்­ப­டாத பணி­களில், வேலை­வாய்ப்பு வெகு­வாக குறைந்­தி­ருந்­தது.இந்­நி­லையில், மத்­திய அரசு, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்து வரு­வதால், வரும் ஆண்­டு­களில், வேலை­வாய்ப்பு மேலும் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)