பதிவு செய்த நாள்
22 டிச2016
15:35

மலிவு விலை கடைகளில், மூன்று ஆண்டுகளில், 59 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில், 2013ல், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, கூட்டுறவு சங்கங்கள் மூலம், மலிவு விலை காய்கறி கடைகளை துவக்கினார். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில், தற்போது, 73 மலிவு விலை காய்கறி கடைகள் உள்ளன. இவற்றில், நேற்று வரை, 59 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் விற்பனையாகி உள்ளன.
இது குறித்து, கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு கடைகளில், தினமும், 20 முதல், 25 டன் வரை, காய்கறிகள் விற்பனையாகின்றன. தற்போது, வெளிச்சந்தையில், விலை குறைவால், வழக்கமாக வருவோர் மட்டுமே, அரசு கடைகளில், காய்கறி வாங்குகின்றனர். மூன்று ஆண்டுகளில், 59 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 ஆயிரத்து, 900 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|