பதிவு செய்த நாள்
22 டிச2016
23:37

புதுடில்லி : சில்லரையில் விற்கப்படும் ஆயத்த ஆடைகளுக்கு, 2011ம் ஆண்டின், பேக்கேஜ் பொருட்கள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ராகுல் மேத்தா கூறியதாவது: மத்திய அரசின் இந்த சலுகை, ஆயத்த ஆடைகள் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பேக்கேஜிங் சட்டத்தில், சில்லரையில் விற்கப்படும் ஆயத்த ஆடைகளுக்கு தெளிவான விதிமுறைகள் இல்லாமல் இருந்தது. அதனால், அட்டை பெட்டியில் விற்கப்படும் ஆடைகளுக்கான, ‘லேபிள்’ விபரங்களை, தனித் தனியே விற்கப்படும் ஆடைகளுக்கு அளிப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இப்போது, அந்த சட்டத்தில் இருந்து, சில்லரை ஆடைகள் பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், ஆய்வு அதிகாரிகளின் தொல்லையின்றி, ஆயத்த ஆடைகள் விற்பனையை, சுதந்திரமாக மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|