பதிவு செய்த நாள்
22 டிச2016
23:41

புதுடில்லி : ‘வெதர் ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், 150 மாவட்டங்களில், தன் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
வானிலை முன் கணிப்பு, தகவல் தொடர்பு, வேளாண் சாகுபடி உள்ளிட்டவை தொடர்பான சேவையில், டபுள்யு.ஆர்.எம்.எஸ்., என்றழைக்கப்படும், வெதர் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனத்தின், 26 சதவீத பங்குகளை, 10 கோடி ரூபாய்க்கு, யு.பி.எல்., நிறுவனம் கடந்த ஆண்டு கையகப்படுத்தியது. இந்நிலையில், தற்போது, டபுள்யு.ஆர்.எம்.எஸ்., நிறுவனம், 40 மாவட்டங்களில் வழங்கி வரும், வானிலை முன் கணிப்பு உள்ளிட்ட தகவல்களை, 150 மாவட்டங்களுக்கு, விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி, சோனு அகர்வால் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 10 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 15 – 17.5 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, எங்கள் நிறுவனம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக, மண் வளத்தை சோதனை செய்வதற்கும், தாவரங்களை ஆய்வு செய்வதற்கும் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, யு.பி.எல்., நிறுவனத்தின் மூலமான முதலீட்டின் காரணமாக எங்கள் சேவையை, 150 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|