பதிவு செய்த நாள்
26 டிச2016
23:37
மும்பை : இந்திய இணையம் மற்றும் மொபைல் போன் கூட்டமைப்பான, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு, வலைதள விளம்பர வருவாயில், சமச்சீர் வரி விதிப்பு முறையை, கடந்த ஜூன், 1ல் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில், விளம்பர வருவாய் ஈட்டும், வெளிநாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான இந்த வரி, தற்போது, 6 சதவீதமாக உள்ளது. இந்த வரி, வலைதளத்தில் புதுமையான தொழில்களில் ஈடுபட்டு வரும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் மீது சுமத்தப்படும் பட்சத்தில், அவை பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவை, வர்த்தக செயல்பாடுகளுக்காக, வெளிநாடுகளின் வலைதளச் சேவைகளை பயன்படுத்தி வருகின்றன. புதிய வரி விதிப்பால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஏற்கனவே செலுத்தும், 15 சதவீத சேவை வரி, 22 சதவீதம் வரை உயரும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இது குறித்து, அரசு ஆய்வு செய்யும் வரை, சமச்சீர் வரியையும், வரி விதிப்பிற்கான சேவைகளையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|