பதிவு செய்த நாள்
28 டிச2016
23:19

புதுடில்லி : மும்பையைச் சேர்ந்த சென்ட்ரல் டிபாசிட்டரி சர்வீசஸ் நிறுவனம், மின்னணு பங்குகளின் பராமரிப்பு சேவையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது. இந்நிறுவனம், விற்பனை செய்ய உள்ள, 3.50 கோடிக்கும் அதிகமான பங்குகளில், 7 லட்சம் பங்குகள், ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. இந்நிறுவனத்தில், மும்பை பங்குச்சந்தை, 50.05 சதவீத பங்குகளை வைத்துள்ளது. அத்துடன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, எல்.ஐ.சி., ஆகியவையும், குறிப்பிட்ட பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|