பதிவு செய்த நாள்
28 டிச2016
23:21

சென்னை : பொறியியல் சாதனங்கள் துறையில் முன்னணியில் உள்ள, எல் அண்ட் டி நிறுவனம், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை, புனேவில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர், எஸ்.என்.சுப்ரமண்யன், சென்னையில் நடைபெற்ற, கே.சி.பி., நிறுவனத்தின் பவள விழாவில் கூறுகையில், ‘‘நிறுவனம், 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை, புனேவில் நிறுவ உள்ளது. ஏற்கனவே, மும்பையில், 9,000 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன,’’ என்றார்.
கே.சி.பி., நிர்வாக இயக்குனர், வி.எல்.தத் கூறியதாவது: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் வர்த்தகத்தை துவக்கி, தற்போது, சிமென்ட், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், எல் அண்ட் டி நிறுவனம் நுழைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. மேம்பட்ட நிதியாதாரம், திறமையான திட்ட மேலாண்மையால், உள்நாட்டிலும், உலகளவிலும், 40 சர்க்கரை ஆலைகள் மற்றும் 12 சிமென்ட் ஆலைகளுடன் நிறுவனம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|