பதிவு செய்த நாள்
28 டிச2016
23:22

ஆமதாபாத் : குஜராத்தில் உள்ள கைரா மாவட்டத்தை சேர்ந்த, அனைத்து பால் உற்பத்தியாளர்களும், வங்கி கணக்கை துவக்கியுள்ளனர்.
குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, ‘அமுல்’ என்ற பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்கிறது. அந்த அமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து, பால் கொள்முதல் செய்கிறது. குஜராத் மாநில பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில், கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர்களும் அடங்குவர். மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டு, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு, அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு, உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, வங்கி கணக்கை துவக்கி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. மேலும் உற்பத்தியாளர்களுக்கு பணம், வங்கி கணக்கு மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து, கைரா மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களும், வங்கி கணக்கை துவக்கி உள்ளனர்.
இது குறித்து, கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் ராம்சிங் பார்மர் கூறியதாவது:எங்கள் மாவட்ட பால் கூட்டமைப்பில், 6.71 லட்சம் பேர் உள்ளனர். அதில், 4.20 லட்சம் பேர் மட்டுமே, வங்கி கணக்கு வைத்திருந்தனர். மத்திய அரசின் அறிவிப்பால், எஞ்சிய, 2.50 லட்சம் பேரும், வங்கி கணக்குகளை துவக்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|