பதிவு செய்த நாள்
28 டிச2016
23:23

துபாய் : ‘இந்தியாவின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், துபாய் நாட்டின் தங்க சந்தையில், வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’ என, ‘கல்ப் நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: துபாயின், ‘கோல்டு சவுக்’ தங்க சந்தையில், இந்தியர்கள் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. அதுபோல, ‘புர் துபாய்’ உள்ளிட்ட பகுதிகளிலும், தங்கம் வாங்க வரும் இந்தியர்கள் எண்ணிக்கை, மிகக் குறைவாகவே உள்ளது. துபாய் வரும் இந்தியர்கள், கையோடு கொண்டு வரும் ரூபாய் நோட்டுகளை, திர்ஹாம் கரன்சியாக மாற்றி, தங்க நகைகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்தியாவில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், துபாய்க்கு, இந்தியர்கள் பணம் கொண்டு வருவது குறைந்துள்ளது. அதுபோல, கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தில், தங்கம் வாங்கி வந்தோரும், தற்போது அவ்வாறு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், துபாய் தங்க சந்தைகளில், வழக்கமாக, 15 – 16 சதவீத அளவிற்கு நடைபெற்று வந்த, ரூபாய் சார்ந்த பரிவர்த்தனைகள், தற்போது வெகுவாக குறைந்து விட்டன.
இந்தியர்கள், தங்கம் வாங்குவது குறைந்துள்ள போதிலும், கடந்த சில வாரங்களாக, சீனர்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி வருகின்றனர். ஆனால், அது, இந்தியர்களுடன் ஒப்பிடும் போது, மிகவும் குறைவு. மேலும், சீனர்கள், இந்தியர்களை போல, 22 காரட் தங்க நகைகளை விரும்புவதில்லை; 18 காரட் தங்க நகைகளில் மட்டுமே வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் அறிவிக்கப்பட்ட, 500 – 1,000 ரூபாய் செல்லாத நோட்டுகளை, நகை கடை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதன் காரணமாகவும், துபாய் தங்க சந்தையின் வர்த்தகம் குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|