பதிவு செய்த நாள்
28 டிச2016
23:26

ஐதராபாத் : ‘மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், ‘எம் – வாலட்’ எனப்படும் மின்னணு பணப் பை வாயிலான பரிவர்த்தனை, குறுகிய காலத்தில் நான்கு மடங்கு உயரும்’ என, ‘அசோசெம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், ஸ்மார்ட் போன் மற்றும் அதன் வாயிலாக இணையத்தை பயன்படுத்துவோர் பெருகி வருவது, மின்னணு துறையின் சீரிய வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.
நடவடிக்கைகள்ஸ்மார்ட் போனில், மின்னணு பணப் பைகள் வாயிலான பணப் பரிமாற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல்வேறு பொருட்களை வாங்கவும், ஒருவருக்கு ஒருவர் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், இந்த மின்னணு பணப் பைகள் உதவுகின்றன. இவற்றின் வாயிலாக நடைபெற்ற பரிவர்த்தனைகளின் மதிப்பு, கடந்த, 2012 – 13ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, 20 மடங்கு உயர்ந்து, 2015 – 16ம் நிதியாண்டில், 20 ஆயிரத்து, 600 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இத்தகைய சூழலில், மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், அறிவித்துள்ள சலுகைகள் ஆகியவற்றால், மின்னணு பணப்பை வாயிலான பரிவர்த்தனை, ஆண்டுக்கு, சராசரியாக, 200 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2021 – 22ம் நிதியாண்டில், 275 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதே காலத்தில், ஸ்மார்ட் போன் வாயிலான, மொத்த பணப் பரிவர்த்தனையில், மின்னணு பணப் பையின் பங்களிப்பு, 20 சதவீதத்தில் இருந்து, 57 சதவீதமாக அதிகரிக்கும்.
பூர்த்தி செய்யும்பணப் பரிவர்த்தனைகள் எண்ணிக்கை, 300 கோடியில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 130 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46 ஆயிரம் கோடியாக உயரும்.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், மின்னணு பணப் பை வாயிலான, மக்களின் சராசரி செலவினம் அதிகரித்து, 500 – 700 ரூபாயாக உயர்ந்துள்ளது; இது, விரைவில், 2,000 – 10 ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கு உயரும். திரும்பப் பெறப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு நிகராக, புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படாது என்பதால், அந்த இடைவெளியை, ரொக்கமில்லாத, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் பூர்த்தி செய்யும். இது, மின்னணு பணப் பை துறையின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதிகரிக்கும்மொபைல் போன் சார்ந்த பணப் பரிமாற்றத்தில், வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் பங்களிப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், 8 சதவீதம் என்ற அளவிற்கே இருந்தது. இது, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், 56 சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|