பதிவு செய்த நாள்
30 டிச2016
23:22

பாஞ்ச்குலா : ‘ஹரியானா மாநிலத்தில் உள்ள, பட்டு நெசவு ஆலைகளை மேம்படுத்த, மத்திய அரசு உதவி செய்யும்’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
ஹரியானாவில், தேசிய ஆடைகள் வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், ஸ்மிருதி இரானி கூறியதாவது: ஹரியானாவில், வேளாண் துறைக்கு அடுத்தபடியாக, ஜவுளித் துறையில் தான், அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஹரியானாவில், ஜவுளித் துறையில், ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் செய்ய உள்ளதாக, பல முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹரியானாவில் உள்ள பானிபட், அம்பாலா, சிர்சா, பாஞ்ச்குலா ஆகிய நான்கு இடங்களில், பட்டு நெசவு ஆலைகளை மேம்படுத்த, மத்திய அரசு உதவி செய்யும். தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம், ஜவுளித் துறை சார்ந்த கல்வி ஊக்குவிக்கப்படும். இதன் மூலம், கூடுதலாக, பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|