பதிவு செய்த நாள்
30 டிச2016
23:24

புதுடில்லி : கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகம், தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்களை, பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன், 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும்; தன்னிச்சையாக, பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, பதிவாளர் அலுவலகம் அனுப்பும் அறிக்கையில், பட்டியலில் இருந்து நீக்குவதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும், பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கை குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்கள், பிரதிநிதிகள் ஆகியோரின் பதிலை கோர வேண்டும். இதற்காக, அறிக்கை அனுப்பிய நாளில் இருந்து, 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இதன் மூலம், நிறுவனங்கள், அவற்றின் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க வழி கிடைக்கும். இந்த நடைமுறை, இம்மாதம், 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|