பதிவு செய்த நாள்
30 டிச2016
23:25

புதுடில்லி : உள்நாட்டு பொருளாதாரத்தில், நிதிச் செயல்பாடுகளை சீராகவும், நிலையாகவும் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி குழுவை அமைத்துள்ளது.
இக்குழுவுக்கு, நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் திரட்டி தர, நிதி தகவல் மேலாண்மை மையம் அமைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலர், அஜய் தியாகி தலைமையிலான குழு, ‘நிதி தகவல் மேலாண்மை மையம்’ என்ற வரைவு மசோதாவுடன், தன் அறிக்கையை, அரசுக்கு அளித்துள்ளது. அதில், நிதி தகவல் மேலாண்மை மையம் அமைக்கப்பட்டு, அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த மையம், நிதித் துறை சார்ந்த அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறும் தகவல்களை ஒருங்கிணைத்து, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி குழுவிற்கு வழங்க வேண்டும். அனைத்து தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும். இதில், மாநில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகளையும் சேர்க்க விரும்பினால், மாநில அரசுகளிடம் ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|