பதிவு செய்த நாள்
30 டிச2016
23:26

புதுடில்லி : பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதிக் கோரி, ‘செபி’யிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த, பி.எஸ்.பி., புராஜக்ட்ஸ், கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்கு தேவையான நிதியை, பங்குச் சந்தைகளில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, திரட்டி கொள்ள திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், தற்போது, குஜராத்தில் மட்டும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. விரைவில், நாடு முழுவதும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு நிதி தேவைப்படுவதால், பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிட்டு, நிதியை திரட்ட உள்ளது. அதற்கு அனுமதி அளிக்குமாறு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, கார்வி இன்வெஸ்டார் சர்வீஸ், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|