பதிவு செய்த நாள்
30 டிச2016
23:27

மும்பை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்க, கூடுதலாக கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாட்டில் பணப் புழக்கம் குறைந்துள்ளது. இதனால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அவற்றின் அன்றாட தேவைகளுக்கு கூட பணமின்றி திணறி வருகின்றன. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி கொடுக்க முடியாமல், பணிகளை நிறுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளன. இப்பிரச்னைகளை கருத்தில் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட கூடுதலாக, நடைமுறை மூலதன கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
அதன் விபரம்: வங்கிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட கூடுதலாக, நடைமுறை மூலதனக் கடன் வழங்கலாம். எனினும், எந்த அளவிற்கு கூடுதலாக நடைமுறை மூலதனக் கடன் வழங்கலாம் என்பது வங்கிகளின் இயக்குனர் குழு எடுக்கும் முடிவை பொறுத்துள்ளது. இந்த கூடுதல் கடன், அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான காலத்திற்கு, ஒருமுறை மட்டுமே வழங்க வேண்டும். அதன் பின், வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|