பதிவு செய்த நாள்
30 டிச2016
23:28

ஜாம்நகர் : நாட்டின், முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத்தில், தன், பாராக்ஸைலின் ஆலை செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக அறிவித்து உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், குஜராத் மாநிலம், ஜாம்நகர் பெட்ரோகெமிக்கல்ஸ் வளாகத்தில், பாராக்ஸைலின் ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலை, தற்போது முதற்கட்ட செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு, 2.2 மில்லியன் டன் பாராக்ஸைலினை தயாரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும், நவீன தொழில்நுட்பத்துடன், சுற்றுப்புற சூழலை பாதிக்காத வண்ணம், இந்த ஆலை அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ஆலையின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய ஆலை செயல்பாட்டுக்கு வந்ததால், நிறுவனத்தின் பாராக்ஸைலின் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும்.தற்போதுள்ள, 2 மில்லியன் டன் என்பது, இனி, 4.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். இதனால், உலகில் இரண்டாவது பெரிய, பாராக்ஸைலின் தயாரிப்பு நிறுவனமாகவும் மாறும். அதுமட்டுமின்றி, ஜாம்நகர் வளாகம் லாபகரமாக இயங்கவும், இந்த புதிய ஆலை மிகவும் உதவிகரமாக இருக்கும். பாலியெஸ்டர் தயாரிப்பில், பாராக்ஸைலின் முக்கிய வகிப்பதால், பாலியெஸ்டர் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு மேலும் வலுப்பெறும். இவ்வாறு ஆலையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|