மாருதி கார் விற்­பனை 1.17 லட்­ச­மாக குறைவு மாருதி கார் விற்­பனை 1.17 லட்­ச­மாக குறைவு ... நிறு­வ­னங்­களின் வரு­மான வரியை குறைத்து சலு­கை­களை நீக்­கினால் முத­லீடு குவியும் நிறு­வ­னங்­களின் வரு­மான வரியை குறைத்து சலு­கை­களை நீக்­கினால் முத­லீடு ... ...
பொது காப்­பீட்டில் பொது துறை நிறு­வ­னங்­களின் லாபம் குறைந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2017
00:09

மும்பை : நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டின், ஏப்., – செப்., வரை­யி­லான முதல் அரை­யாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்கள் இழப்பை சந்­தித்­துள்­ளன. இவை, அதிகம் பிரீ­மியம் வசூ­லித்த போதிலும், புயல், தீ விபத்து போன்­ற­வற்­றுக்கு, பெருந்­தொ­கையை இழப்­பீ­டாக வழங்க நேரிட்­டதால், அவற்றின் லாபம் சரி­வ­டைந்­து உள்­ளது.
மதிப்­பீட்டு காலத்தில், யுனைடெட் இந்­தியா மற்றும் ஓரி­யண்டல் இன்­சூரன்ஸ் நிறு­வ­னங்கள், முறையே, 429 கோடி ரூபாய் மற்றும் 382 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­துள்­ளன. கடந்த நிதி­யாண்டின், இதே காலத்தில் இந்­நி­று­வ­னங்கள், முறையே, 356 கோடி ரூபாய் மற்றும், 335 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யி­ருந்­தன. இதே காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, நியூ இந்­தியா அஸ்­யூரன்ஸ் நிறு­வ­னத்தின் லாபம், 921 கோடி ரூபாயில் இருந்து, 514 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இந்­நி­று­வனம், நடப்பு நிதி­யாண்டின், முதல் அரை­யாண்டில், பிரீ­மி­ய­மாக, 11,204 கோடி ரூபாய் திரட்­டி­யுள்­ளது.இதே காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்­பர்டு நிறு­வ­னத்தின் நிகர லாபம், 302 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த நிதி­யாண்டின், இதே காலத்தில், 258 கோடி ரூபா­யாக இருந்­தது.
பஜாஜ் அலையன்ஸ் நிறு­வ­னத்தின் நிகர லாபம், 288 கோடி ரூபாயில் இருந்து, 366 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. சென்­னையை உலுக்­கிய, ‘வர்தா’ புயலால், பொது காப்­பீட்டு நிறு­வ­னங்கள், பெருந்­தொ­கையை இழப்­பீ­டாக வழங்க வேண்­டி­யுள்­ளது. இது குறித்த மதிப்­பீடு, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின், மூன்றாம் காலாண்டு நிதி­நிலை அறிக்­கையில் எதி­ரொ­லிக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)