ஆப்பிள் நிறு­வ­னத்­திற்கு சலுகை; மத்­திய அரசு தர மறுப்புஆப்பிள் நிறு­வ­னத்­திற்கு சலுகை; மத்­திய அரசு தர மறுப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.90 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 67.90 ...
சரக்கு மற்றும் சேவை வரியால் ஐ.டி., துறை பாதிக்­கப்­படும்: ‘நாஸ்காம்’ எச்­ச­ரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2017
23:47

புது­டில்லி : ‘ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி விதி­களில் உள்ள, ஒரு­சில அம்­சங்கள், ஐ.டி., துறையை பாதிக்கும் வகையில் உள்­ளன’ என, ‘நாஸ்காம்’ அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
மத்­திய அரசு, பல முனை வரி­களை நீக்கி, நாடு தழு­விய அளவில், ஒரே சீரான வரி விதிப்­பிற்கு வழி­வ­குக்கும், சரக்கு மற்றும் சேவை வரியை, வரும் ஏப்., முதல் அமல்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இந்­நி­லையில், ‘‘சரக்கு மற்றும் சேவை வரி விதி­களில், ஐ.டி., எனப்­படும், தகவல் தொழில்­நுட்பத் துறையை பாதிக்கும் அம்­சங்­க­ளுக்கு தீர்வு காண வேண்டும்,’’ என, ஜி.எஸ்.டி., குழு­விடம், நாஸ்காம் தலைவர், ஆர்.சந்­தி­ர­சேகர் வலி­யு­றுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது: இந்­தியா, ஐ.டி., துறை ஒன்றில் தான், உலக நாடு­களை விஞ்சி நிற்­கி­றது. தற்­போது, இத்­து­றையும், சர்­வ­தேச அளவில் எழுந்­துள்ள, உள்­நாட்டு வேலை­வாய்ப்­புக்கு முன்­னு­ரிமை, தாரா­ள­ ம­ய­மாக்கல் எதிர்ப்பு போன்ற சவால்­களை சந்­திக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், தற்­போ­தைய விதி­க­ளின்­படி, ஜி.எஸ்.டி., அம­லானால், ஐ.டி., துறை உள்­நாட்­டிலும், பிரச்­னை­களை எதிர்­கொள்ள நேரிடும். தற்­போது, ஐ.டி., நிறு­வ­னங்கள், ஒற்றை சேவை ஒப்­பந்­தத்தின் கீழ், உள்­நாடு அல்­லது வெளி­நா­டு­களில் உள்ள, பல வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சாப்ட்வேர் சேவை­களை வழங்­கு­கின்­றன.
தற்­போ­தைய, ஜி.எஸ்.டி., வரைவு விதி, ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ள­ருக்கும் வழங்­கப்­படும் சாப்ட்வேர் சேவைக்­கான வரு­வாயை மதிப்­பீடு செய்ய வலி­யு­றுத்­து­கி­றது. நாடு முழு­வதும் கிளைகள் உள்ள, ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த நடை­முறை சாத்­தி­ய­மற்­றது. இதனால், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை திரும்பப் பெறு­வது தொடர்­பான கணக்­கீட்­டிலும் குழப்பம் ஏற்­படும். மேலும், இத்­திட்­டத்தால், ஐ.டி., நிறு­வ­னங்கள், அவற்றின் அடிப்­படை கட்­ட­மைப்பு சாப்ட்­வேரில் மாற்­றங்கள் செய்ய வேண்டும். ஆகவே, சரக்கு மற்றும் சேவை வரியில், ஐ.டி., துறைக்கு, ஒரே சேவையின் கீழ், வரி செலுத்தும் பிரிவும், விருப்பத் தேர்­வாக இடம் பெற வேண்டும்.
சாப்ட்வேர் என்­பது, சரக்கு பிரிவில் வருமா அல்­லது சேவையில் சேர்க்­கப்­பட வேண்­டுமா என, முன்பு விவாதம் எழுந்த போது, அது மறை­முக சேவை என, தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அது, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்­பான முந்­தைய வரைவு மசோ­தா­விலும் இடம் பெற்­றி­ருந்­தது. ஆனால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, தற்­போது அது குறித்து மீண்டும் விவாதம் எழுந்­துள்­ளது. தற்­போ­தைய சேவை சட்­டத்­தின்­படி, சாப்ட்வேர் விற்­பனை, சேவைகள் பிரிவில் உள்­ளது. இது, ஜி.எஸ்.டி., சட்­டத்­திலும் இடம் பெற வேண்டும். அதில், அனைத்து மின்­னணு பதி­வி­றக்­கங்­களும், சேவை பிரிவைச் சேர்ந்­தவை என, தெளி­வாக வரை­ய­றுக்­கப்­பட வேண்டும். இத்­த­கைய கோரிக்­கைகள் அடங்­கிய மனு, ஜி.எஸ்.டி., குழு­விடம் வழங்­கப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)