பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:35

மும்பை : நாட்டில், ஐந்தாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான, டெக் மகிந்திரா, சவுதி அரேபியாவில் உள்ள, அல் போஸான் குழுமத்துடன் இணைந்து, டெக் மகிந்திரா அரேபியா என்ற கூட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளது. இதில், டெக் மகிந்திரா பெரும்பான்மை பங்குகளை கொண்டுள்ளது. கூட்டு நிறுவனம் மூலம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தற்போது, டெக் மகிந்திரா நிறுவனம், சவுதி அரேபியாவில், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோகெமிக்கல், வங்கி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, ௩0க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. மேலும்,1,600 ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாகவும் சேவை அளித்து வருகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சி.பி.குர்னானி கூறுகையில், ‘‘ இந்த கூட்டு நிறுவனம் மூலம், உள்ளூர் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, மேம்பட்ட சேவைகளை சிறப்பாக வழங்க முடியும். இதன் மூலம், உள்நாட்டு பொருளாதாரமும் மேம்படும்’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|