பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:37

கோல்கட்டா : ‘‘இந்தியாவில், 2,100 ரூபாய் விலை உள்ள ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்படும்,’’ என, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அவர், மேற்கு வங்க மாநிலம், கரக்பூர் ஐ.ஐ.டி., மாணவர்களிடையே பேசுகையில், ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவில், ஏராளமானோர், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். இதனால், உலகளவில், போட்டிமிக்க மின்னணு பொருளாதார நாடாக, இந்தியா உயரும்,’’ என்றார்.
கூகுள் நிறுவனம், 2014ல், 6,000 ரூபாய் விலையில், ‘ஆண்ட்ராய்டு ஒன்’ என்ற ஸ்மார்ட்போனை, மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மொபைல், கார்பன் நிறுவனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்நிறுவனங்கள், போதிய விளம்பரங்களை மேற்கொள்ளாததால், ஸ்மார்ட் போன் விற்பனை வீழ்ச்சி கண்டது. இம்முறை, கூகுள் நிறுவனம், பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போனை, நேரடியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|