பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:38

மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட, அரசு மற்றும் நிதி சாரா துறைகளைச் சேர்ந்த, 2,702 தனியார் நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்நிறுவனங்களின் நிகர லாபம், நடப்பு 2016 – 17ம் நிதியாண்டின், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 16 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது, ஏப்ரல் – ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், 11.2 சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, பூஜ்ஜியத்தில் இருந்து, 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.தயாரிப்பு துறை நிறுவனங்களின் நிகர லாபம் அதிகமாகவும், ஐ.டி., துறை சாரா, சேவை நிறுவனங்களின் நிகர லாபம், தொடர்ந்து குறைந்தும் வருவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|