பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:39

புதுடில்லி : ‘இந்தாண்டு, உலகளவில், கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்லட் ஆகியவற்றின் விற்பனை, ஏற்ற, இறக்கமின்றி இருக்கும்’ என, ‘கார்ட்னர்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த, 2016ல், உலகளவில் பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்லட், ஸ்மார்ட் போன்களின் விற்பனை, 232 கோடியாக இருந்தது. சர்வதேச மந்தநிலையால், இந்தாண்டும், இதே அளவில் தான் விற்பனை இருக்கும். எனினும், 2018ல், 235 கோடியாகவும், அதற்கடுத்த ஆண்டில், 238 கோடி என்ற அளவிலும், விற்பனை உயரும். வளரும் ஆசிய பசிபிக் நாடுகளில் மட்டுமே, மொபைல் போன் விற்பனை, வளர்ச்சி கண்டு வருகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சரிவை நோக்கி செல்கிறது.
கடந்த ஆண்டு, 26.80 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாயின. இது, இந்தாண்டு, 26.60 கோடியாக குறையும். இதே காலத்தில், மொபைல் போன் விற்பனை, 188 கோடியில் இருந்து, 189 கோடியாக அதிகரிக்கும்.வளரும் நாடுகளில், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை, ஸ்மார்ட் போன்களில் மேற்கொள்வோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதனால், வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகளில், அடிக்கடி ஸ்மார்ட் போன்களை மாற்றுவது அதிகரித்து வருகிறது.
சந்தையில், புதிய கண்டுபிடிப்பு சாதனங்கள் குறைந்துள்ளதால், தேக்கம் காணப்படுகிறது. இதனால், சாதனங்கள் விலை உயராமல் உள்ளது. மக்கள், மெய்நிகர் வீடியோ விளையாட்டு சாதனங்கள், ஸ்பீக்கர்கள் ஆகியவற்றை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|