பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:40

மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், கடந்த ஆண்டில், 49.88 லட்சம், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், உள்நாட்டில், இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், கடந்த ஆண்டில், 50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டது. இந்நிலையில், மத்திய அரசு, நவ., மாதம், செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதனால், வாகன விற்பனை பாதிக்கப்பட்டது. இருப்பினும், ஹோண்டா, கடந்த ஆண்டில், 49.88 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு, துணைத் தலைவர் குலேரியா கூறியதாவது: செல்லாத நோட்டு அறிவிப்பால், 80 மாதங்களுக்கு பின், கடந்த டிச., மாதம், வாகன விற்பனை குறைந்தது. கடந்த, 2015ல், ஹோண்டா, 45.08 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது. இது, 2016ல், 11 சதவீதம் அதிகரித்து, 49.88 லட்சமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த டிச., மாதம், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை, 42 சதவீதம் உயர்ந்து, 57 ஆயிரத்து, 398 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை, 34 சதவீதம் குறைந்து, 3.30 லட்சமாக சரிவடைந்துள்ளது. பஜாஜ் ஆட்டோ விற்பனை, 2.25 லட்சம்; டி.வி.எஸ்., நிறுவனத்தின் விற்பனை, 1.84 லட்சம் என்றளவில் குறைந்து விற்பனையாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|