பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:41

புதுடில்லி : இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கு, ஆலோசனை நிறுவனத்தின் உதவியை நாட, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த இரண்டரை ஆண்டுகளில், தொழில் துறையை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கும், உள்நாட்டில், தொழில் முனைவோர், சுலபமாக தொழில்களை துவங்குவதற்கும் தடையாக இருந்த, கடுமையான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
சலுகை :மருந்து, விமானம், உணவு உள்ளிட்ட பல துறைகளில், அன்னிய நிறுவனங்கள், அரசு அனுமதியின்றி நேரடியாக முதலீடு செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தொழில் உரிமம் பெறும் நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பித்த ஒரு வாரத்தில், தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிக்கலின்றி, தொழிற்சாலை அமைப்பதற்கான நிலம் வாங்க வசதியாக, நிலம் கையகப்படுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், மூலதன முதலீட்டு மானியம், நிறுவனங்களின் நடைமுறை மூலதன வட்டிக்கு மானியம், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வருமான வரி, மூலதன ஆதாய வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால், தொழில் துவங்குவது சுலபமாகும்; தொழில் துறை, சிறப்பான வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், தொழில் துறையின் அடிப்படை கட்டமைப்பில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவில்லை.
உலக வங்கிஇது, ‘சுலபமாக தொழில் செய்ய உகந்த நாடுகள்’ குறித்து, உலக வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. சுலபமாக தொழில் செய்வதற்கான, 10 அம்சங்களின் அடிப்படையில், 190 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியா, 130வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, வரும் ஆண்டு களில், இந்தியாவை, முதல் 50 நாடுகளில் ஒன்றாக முன்னேற்றும் நோக்கில், ஆலோசனை நிறுவனத்தின் உதவியை நாட, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டு உள்ள அறிக்கை: தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தெரிவிக்க, ஆலோசனை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனம், அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, அதன் பரிந்துரையை, மத்திய அரசுக்கு வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|