பதிவு செய்த நாள்
06 ஜன2017
10:04

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜனவரி 06, காலை 9 மணி நிலவரம்)சென்செக்ஸ் 58.43 புள்ளிகள் உயர்ந்து 26,936.67 புள்ளிகளாகவும், நிப்டி 16.95 புள்ளிகள் உயர்ந்து 8290.75 புள்ளிகளாகவும் உள்ளன. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 8300 புள்ளிகளை நெருங்கி உள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கெயில், ஹீரோ மோட்டோகார்ப், ஹச்டிஎப்சி வங்கி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் பங்குச்சந்தைகளின் தொடர் உயர்விற்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|