பதிவு செய்த நாள்
06 ஜன2017
10:37

ரேஷன் கடைகளில், வரும் 9ல் இருந்து, பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், 1.80 கோடி ரேஷன்கார்டுகளுக்கு, பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளன. தலா, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், தலா, 20 கிராம் எடையில் முந்திரி, திராட்சை மற்றும், ஐந்து கிராம் ஏலக்காய் ஒரு சேர வழங்கப்படும். இதனால், தேவையான ஏலக்காயை, மொத்தமாக கொள்முதல் செய்ய, கூட்டுறவு அதிகாரிகள், போடிநாயக்கனுார் சந்தைக்கு படையெடுத்துள்ளனர். ஏலக்காய் விலை எகிறி உள்ளது.
கூட்டுறவு துணைப்பதிவாளர் ஒருவர் கூறியதாவது: அரிசி, சர்க்கரை தவிர்த்து, முந்திரி, திராட்சை, ஏலக்காய் வாங்க, 30 ரூபாய், இரண்டு அடி கரும்பு துண்டுக்கு, 15 ரூபாய் சேர்த்து, கொள்முதல் செய்ய, ஒரு ரேஷன் கார்டுக்கு, தலா, 45 ரூபாய் வீதம், அரசு நிதி ஒதுக்கியுள்ளது.வரும், 9ல் இருந்து, பொங்கல் பரிசு வழங்க, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடு, முழுவீச்சில் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
போடி ஏலக்காய் வியாபாரிகள் கூறியதாவது:கேரளாவில், ஏலக்காய் விளைச்சல் அதிகம் என்றாலும், போடி, தேவாரம், கோம்பை, குமுளி ஆகிய சந்தைகளில், தினசரி ஏலம் நடக்கும். தமிழகத்தில், ஏலக்காய் சந்தை என கூறப்படும் போடி மார்க்கெட்டில், விலை நிர்ணயிக்கப்படுகிறது.வறட்சியால், ஏலக்காய் சாகுபடி, 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. தரத்திற்கேற்ப, கிலோ, 800 - 1,200 ரூபாய் விற்ற ஏலக்காய், தற்போது, 1,100 - 1,320 ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கழிவுடன் கூடிய தரம் பிரிக்காத ஏலக்காய். தற்போது, முதல் ரக ஏலக்காய் வரத்து கிடையாது. இரண்டாம் ரகம், கிலோ, 1,650 ரூபாய், மூன்றாம் ரகம், 1,500 ரூபாய் வரை கிடைக்கிறது. அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளதால், விலை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|