பதிவு செய்த நாள்
06 ஜன2017
15:21

புதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட் கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவையை ஏர்இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 10 ம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை கட்டணம் ஜனவரி 26ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். பயண தேதிக்கு 20 நாட்கள் அல்லது அதற்கு முன்னதாகவோ சலுகை விலையில் விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். மிகக் குறைந்த கட்டணமாக டில்லி - ஜம்மு பயணத்திற்கு ரூ.1610 , டில்லி - மும்பை பயணத்திற்கு ரூ.2401, டில்லி - பெங்களூரு ரூ.2952, டில்லி - சென்னை ரூ.3100 வசூலிக்கப்பட உள்ளது. இந்த சலுகை கட்டண விமான பயணத்திற்கான இருக்கை எண்ணிக்கை குறித்த விபரம் எதையும் ஏர்இந்தியா வெளியிடவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|