பதிவு செய்த நாள்
06 ஜன2017
16:06

மும்பை : கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. வர்த்தக நேர முடிவில் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இவ்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 119.01 புள்ளிகள் சரிந்து 26,759.23 புள்ளிகளாகவும், நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 8243.80 புள்ளிகளாகவும் உள்ளன.
காலை நேர வர்த்தகத்தின் போது மீண்டும் 8300 புள்ளிகளை எட்டிய நிப்டி, பிற்பகல் வர்த்தகத்தில் போது மீண்டும் சரிந்தது. தொழில்துறை நிறுவன பங்குகளின் சரிவு, முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருவது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|