வங்­கி­களில் காசோலை தேவை 5 மடங்கு அதி­க­ரிப்பு வங்­கி­களில் காசோலை தேவை 5 மடங்கு அதி­க­ரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் தேக்க நிலை: ‘கிரிசில்’ ஆய்­வ­றிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
02:19

புது­டில்லி : ‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், நடப்பு, 2016 – 17 நிதி­யாண்டில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் வளர்ச்சி, ஏற்ற, இறக்­க­மின்றி இருக்கும்’ என, ‘கிரிசில்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், நவ., 24 – டிச., 24 வரை, 1,100க்கும் அதி­க­மான குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளிடம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில், 58 சத­வீத நிறு­வ­னங்கள், தயா­ரிப்­பிலும், எஞ்­சி­யவை, சேவை துறை­யிலும் ஈடு­பட்­டுள்­ளன. ஆய்வில் பங்­கேற்ற, 58 சத­வீத நிறு­வ­னங்கள், நக­ரங்­க­ளிலும், 53 சத­வீத நிறு­வ­னங்கள், சிறிய மற்றும் சிற்­றுார்­க­ளிலும் இயங்கி வரு­கின்­றன. பாதிக்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­களின் ஆண்டு வருவாய், 2 கோடி ரூபாய்க்கும் குறை­வாக உள்­ளது.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், அதி­க­ளவில் ரொக்கப் பரி­மாற்­றத்தை சார்ந்­துள்ள, ஜவுளி, வேளாண் பொருட்கள், உருக்கு, நுகர்வோர் சாத­னங்கள், கட்­டு­மானம், வாக­னங்கள் ஆகிய துறைகளைச் சார்ந்த நிறு­வ­னங்கள், பெரிதும் பாதிக்­கப்­பட்டு உள்­ளன. வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் பணம் வசூ­லிப்­பதில் ஏற்­பட்ட தாமதம் கார­ண­மாக, குறித்த நேரத்தில் கடனை திரும்ப செலுத்­தாமல், ஊழி­யர்­க­ளுக்கு ஊதியம் வழங்க முடி­யாமல், பல்­வேறு நெருக்­க­டி­களை, நிறு­வ­னங்கள் சந்­தித்­துள்­ளன. இதில், அதிகம் பாதித்­தது, உருக்கு நிறு­வ­னங்கள் தான். அதை தொடர்ந்து, ஜவுளி, சரக்கு போக்­கு­வ­ரத்து, கட்­டு­மான துறை நிறு­வ­னங்கள் உள்­ளன.
அதே சமயம், வேலை­வாய்ப்பு நிறு­வ­னங்கள், பாது­காப்பு மற்றும் ஐ.டி., சேவை­களில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­களில், பாதிப்பு மிகக் குறை­வா­கவே உள்­ளது. ஏப்., – செப்., வரை­யி­லான அரை­யாண்டில், மருந்து, ஐ.டி., சேவைகள், வாகன உதி­ரி­பா­கங்கள், வாகன முக­வர்கள், நுகர்­பொருள் நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றின் விற்­பனை, சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளது. பண மதிப்பு நீக்­கத்தால், 42 சத­வீத நிறு­வ­னங்கள், காசோலை அல்­லது மின்­னணு பணப் பரி­மாற்­றத்­திற்கு மாறி­யுள்­ளன. பெரிய நக­ரங்­களை விட, நக­ரங்கள், சிறிய நக­ரங்­களில் ரொக்கப் பரி­வர்த்­தனை அதிகம் என்­பதால், அங்­குள்ள நிறு­வ­னங்கள் அதிகம் பாதிக்­கப்­பட்டு உள்­ளன.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு முன், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் வருவாய், நடப்பு நிதி­யாண்டில், 15 – 20 சத­வீதம் வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது; இது, தற்­போது, 6 – 8 சத­வீ­த­மாக குறையும் என, மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு உள்­ளது. பெரும்­பா­லான நிறு­வ­னங்கள், ‘இந்த தற்­கா­லிக பாதிப்பு, ஜூன் மாதத்­திற்குள் சீராகி விடும்’ என, கூறி­யுள்­ளன. வழக்­க­மாக, அக்., – மார்ச் வரை­யி­லான இரண்­டா­வது அரை­யாண்டில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் செயல்­பாடு நன்கு இருக்கும். அதனால், பண மதிப்பு நீக்க பாதிப்­பிலும், நடப்பு நிதி­யாண்டில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களின் வளர்ச்சி, ஏற்ற, இறக்­க­மின்றி இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)