‘எக்ஸ்­பீ­ரியன்ஸ் ஸ்டோர்’ஒன் பிளஸ் புதிய முயற்சி‘எக்ஸ்­பீ­ரியன்ஸ் ஸ்டோர்’ஒன் பிளஸ் புதிய முயற்சி ... ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி - மீண்டும் ரூ.68-ஐ தாண்டியது ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி - மீண்டும் ரூ.68-ஐ தாண்டியது ...
ஐ.பி.ஏ., அமைப்பு மதிப்­பீடு:நாட்டின் பெயின்ட் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2017
02:18

பெங்­க­ளூரு:‘இந்­திய பெயின்ட் சந்­தையின் மதிப்பு, 2014 – 15ம் நிதி­யாண்டில், 40,300 கோடி ரூபா­யாக இருந்­தது; இது, 2019 – 20ம் நிதி­யாண்டில், 70,875 கோடி ரூபா­யாக உயரும்’ என, ஐ.பி.ஏ., எனப்­படும், இந்­திய பெயின்ட் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. இக்­கூட்­ட­மைப்பின், 28வது ஆண்டு மாநாடு, பெங்­க­ளூரில் துவங்­கி­யது. இதில், இந்­திய பெயின்ட் துறை குறித்து, நீல்சன் கார்ப்­ப­ரேஷன் நிறு­வனம் தயா­ரித்த ஆய்­வ­றிக்கை சமர்ப்­பிக்­கப்­பட உள்­ளது.
வளர்ச்சி:
இந்த அறிக்கை குறித்து, ஐ.பி.ஏ., தலைவர் ஜலாஜ் தனி, செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசி­ய­தா­வது:இந்­தி­யாவில், பெயின்ட் துறை மிக வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, வீடு, கட்­ட­டங்கள், வணிக வளா­கங்கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான அலங்­கார பெயின்ட் சந்­தையின் மதிப்பு, 30,385 கோடி ரூபா­யாக உள்­ளது.
இதே காலத்தில், தொழிற்­சா­லை­களில் பயன்­ப­டுத்தும் பெயின்ட் சந்­தையின் மதிப்பு, 9,915 கோடி ரூபாய் என்­ற­ளவில் இருந்­தது.அலங்­காரம் மற்றும் தொழிற்­சாலை பெயின்ட் சந்­தைகள் முறையே, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 12.7 சத­வீதம் மற்றும் 9.5 சத­வீதம் என்­ற­ளவில் வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. ஒட்­டு­மொத்த பெயின்ட் சந்தை, 2011 – 12 முதல், 2014 – 15ம் நிதி­யாண்­டுகள் வரை, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 12.9 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது.கடந்த, 2014 – 15ம் நிதி­யாண்டில், இந்­தி­யாவில் தனி­நபர் பெயின்ட் பயன்­பாடு, 3.34 கிலோ என்­ற­ளவில் இருந்­தது.
சவால்அலங்­கார பெயின்ட்­டு­களில், வெளிப்­புறம் மற்றும் உட்­பு­றத்­திற்­கான, ‘எமல்ஷன்’ பெயின்ட் பிரிவின் வளர்ச்சி சிறப்­பாக உள்­ளது. அது போல, தொழிற்­சாலை பிரிவில், வாக­னங்­க­ளுக்­கான பெயின்ட் மற்றும் வண்ணப் பவுடர் பூச்சு பிரி­வுகள், நல்ல வளர்ச்­சியை கண்டு வரு­கின்­றன.பெயின்ட் துறையின் வேக­மான வளர்ச்­சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், திற­மை­யான பணி­யா­ளர்கள் கிடைப்­பது சவா­லாக உள்­ளது.
இந்த பிரச்­னையை சமா­ளிக்க, அடுத்த மூன்று ஆண்­டு­களில், பெயின்ட் துறையில், மூன்று லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இதற்­காக, மத்­திய அரசின் தேசிய திறன் மேம்­பாட்டு கழ­கத்­துடன், ஐ.பி.ஏ., ஒப்­பந்தம் செய்து கொண்­டுள்­ளது. இக்­க­ழகம், பெயின்ட் துறைக்கு தேவை­யான திறன் பயிற்­சியை பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்கும். இதன் மூலம், பெயின்ட் துறையில், திற­னுள்ள பணி­யா­ளர்­க­ளுக்­கான தேவை, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு பூர்த்­தி­யாகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)