ஆலை உற்­பத்தி திறனை உயர்த்த நால்கோ நிறு­வனம் திட்டம்ஆலை உற்­பத்தி திறனை உயர்த்த நால்கோ நிறு­வனம் திட்டம் ... ‘கியர் எஸ் 3’ ஸ்மார்ட் வாட்ச்; சாம்சங் நிறு­வனம் அறி­முகம் ‘கியர் எஸ் 3’ ஸ்மார்ட் வாட்ச்; சாம்சங் நிறு­வனம் அறி­முகம் ...
சீர்­தி­ருத்­தங்­களை பொருத்தே இந்­தி­யாவின் கடன் தகுதி; அமெ­ரிக்­காவின் ‘மூடிஸ்’ நிறு­வனம் அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
01:27

புது­டில்லி : ‘மத்­திய அர­சுக்கு, கொள்கை சீர்­தி­ருத்­தங்­களை நிறை­வேற்றும் ஆற்றல் உள்­ளதா என்ற மதிப்­பீட்டின் அடிப்­ப­டையில், இந்­தி­யா­விற்­கான கடன் தகுதி குறி­யீடு நிர்­ண­யிக்­கப்­படும்’ என, அமெ­ரிக்­காவின் தர நிர்ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்­துள்­ளது.
ஒரு நாட்டின் பொரு­ளா­தாரம், நிதி, வர்த்தகம், அர­சியல் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களின் அடிப்­ப­டையில், அந்­நாட்­டிற்­கான கடன் தகுதி குறி­யீட்டை, மூடிஸ் நிறு­வனம் வழங்­கு­கி­றது. அத­ன­டிப்­ப­டையில், அந்­நாட்டில் முத­லீடு செய்­வதை, அன்­னிய நிதி நிறு­வ­னங்கள் தீர்­மா­னிக்­கின்­றன. இதன்­படி, முத­லீ­டு­க­ளுக்கு மிகச் சொற்ப அள­விற்கே இடர்­பாடு உள்­ளதை குறிக்க, ஏ.ஏ.ஏ., குறி­யீடு வழங்­கப்­ப­டு­கி­றது. இடர்­பாடு குறை­வாக உள்ள நாடு­க­ளுக்கு, ஏ.ஏ 1, ஏ.ஏ 2, ஏ.ஏ 3 குறி­யீ­டுகள் தரப்­ப­டு­கின்­றன. மித­மான இடர்­பாடு வாய்ப்பை குறிக்க, பி.ஏ.ஏ 1, பி.ஏ.ஏ 2, பி.ஏ.ஏ 3 ஆகிய குறி­யீ­டுகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.
மூடிஸ் நிறு­வனம், இந்­தி­யாவின் கடன் தகு­திக்கு, பி.ஏ.ஏ 3 குறி­யீட்டை வழங்­கி­யுள்­ளது. இதில் முன்­னேற்றம் காண்­பது, மத்­திய அரசின் செயல்­பா­டு­களை பொருத்­துள்­ளது என, மூடிஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம்:மத்­திய அரசு, பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக, அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை தளர்த்­தி­யது; ஜி.எஸ்.டி., மசோ­தாவை நிறை­வேற்­றி­யது; திவால் சட்­டத்தில் திருத்தம் செய்­தது உள்­ளிட்ட ஏரா­ள­மான நட­வ­டிக்­கை­களை கூறலாம். பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அரசின், இந்த செயல்­பா­டுகள், இந்­தி­யாவில், தனியார் முத­லீ­டு­களை ஊக்­கு­வித்து, ஸ்திர­மான பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும், அரசின் கடன் சுமை குறை­யவும் வழி­வ­குக்கும்.
மத்­திய அரசின் சீர்­தி­ருத்த கொள்­கைகள், நாட்டின் நடுத்­தர கால வளர்ச்­சிக்கு துணை நிற்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத­ன் அடிப்­ப­டையில், இந்­தி­யா­வுக்கு சாத­க­மான தரக் குறி­யீடு வழங்­கப்­பட்டு உள்­ளது. எனினும், அறி­விக்­கப்­பட்ட சீர்­தி­ருத்த கொள்கை­களை செயல்­பாட்­டிற்கு கொண்டு வரும் ஆற்றல், அர­சுக்கு உள்­ளதா என்­ப­தை யும், அத்­திட்­டங்­களால் கிடைத்த பயன்கள் குறித்தும் ஆராய்ந்த பின்னே, கடன் தகுதி குறி­யீட்டில் மாற்றம் செய்­வது குறித்து முடி­வெ­டுக்க முடியும். இந்­தாண்டு, ஆசிய பசிபிக் பிராந்­திய நாடு­களின் கடன் தகுதி மதிப்­பீடு, ஸ்திர­மாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)