மின்­னணு உற்­பத்தி மண்­ட­லங்கள் நாடு முழு­வதும் அமைக்க முடிவு மின்­னணு உற்­பத்தி மண்­ட­லங்கள் நாடு முழு­வதும் அமைக்க முடிவு ... ரூபாய் மதிப்பில் சரிவு : 68.19 ரூபாய் மதிப்பில் சரிவு : 68.19 ...
இந்­திய நிறு­வ­னங்­க­ளிடம் ‘சைபர்’ தாக்­கு­தலை முழு­மை­யாக தடுக்கும் திற­னில்லை; ஆய்­வ­றிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2017
00:33

புது­டில்லி : ‘இந்­திய நிறு­வ­னங்­க­ளிடம், கணினி மூலம் நடை­பெறும் தகவல் திருட்டு, பண மோசடி உள்­ளிட்ட, ‘சைபர்’ தாக்­கு­தலை தடுப்­ப­தற்­கான பாது­காப்பு வசதி, போது­மான அள­விற்கு இல்லை’ என, ‘எர்னஸ்ட் அண்ட் யங்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
இந்­நி­று­வனம், 2016 ஜூன் – ஆக., வரை, பல்­வேறு துறை­களில் உள்ள, சிறிய, நடுத்­தர மற்றும் பெரிய நிறு­வ­னங்­களைச் சேர்ந்த, 124 தலைமை செயல் அதி­கா­ரி­களின் கருத்­துக்­களை தொகுத்து, அறிக்கை வெளி­யிட்டு உள்­ளது. அதில், அரசு மற்றும் பங்­குச்­சந்தை பட்­டி­யலில் உள்ள, சில நிறு­வ­னங்­களின் உய­ர­தி­கா­ரி­களின் கருத்­துக்­களும் இடம் பெற்­றுள்­ளன.
ஆய்­வ­றிக்கை விபரம்: சைபர் தாக்­கு­தலை சமா­ளிக்க, தேவை­யான பாது­காப்பு வச­திகள் தங்கள் நிறு­வ­னங்­களில் இல்லை என, 75 சத­வீதம் பேர் ஒப்புக் கொண்­டுள்­ளனர். சைபர் தாக்­கு­தலின் பாதிப்பை, தங்கள் நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழு முழு­மை­யாக அறி­யாமல் உள்­ள­தாக, 38 சத­வீ­தத்­தினர் கூறி­யுள்­ளனர்.கடந்த ஓராண்டில், சைபர் பாது­காப்­புக்­கான பட்ஜெட் ஒதுக்­கீட்டை உயர்த்­தி­யுள்­ள­தாக, 69 சத­வீ­தத்­தி­னரும், அடுத்த ஓராண்­டிற்குள் உயர்த்த உள்­ள­தாக, 75 சத­வீதம் பேரும் தெரி­வித்து உள்­ளனர்.சைபர் பாது­காப்­பிற்­கான முத­லீ­டு­களை அதி­க­ரித்­துள்ள போதிலும், அதன் பலன் முழு­மை­யாக கிடைக்­க­வில்லை என, 75 சத­வீ­தத்­தினர் கூறி­யுள்­ளனர்.
காலத்­திற்­கேற்ப, புதிய தொழில்­நுட்­பத்தில், சைபர் பாது­காப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­தாமல், பழைய கட்­ட­மைப்பை பின்­பற்­று­வதால், இந்­திய நிறு­வ­னங்கள் இடர்­பா­டு­களை சந்­திக்கும் வாய்ப்பு, கடந்த ஓராண்டில் அதி­க­ரித்­துள்­ளது. இப்­பி­ரச்னை மிக முக்­கி­ய­மா­னது என, 61 சத­வீதம் பேர் தெரி­வித்­துள்­ளனர். சைபர் பாது­காப்பு பிரச்­னையில், நிறு­வ­னங்கள் அலட்­சி­ய­மாக உள்­ளன என, 58 சத­வீதம் பேர் கூறி­யுள்­ளனர்.
நிறு­வ­னங்­களின் முகத்­தி­ரையை கிழிப்­பது; அறி­வுசார் சொத்­து­ரிமை தக­வல்­களை திரு­டு­வது; மோசடி ஆகி­ய­வற்­றுக்­காக, சைபர் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கி­றது என, முறையே, 54 சத­வீதம், 51 சத­வீதம் மற்றும் 48 சத­வீதம் பேர் கூறி­யுள்­ளனர். கணி­னியில் நாச­கர வேலை செய்வோர், புதிய தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி, மோச­டியில் ஈடு­ப­டு­கின்­றனர். இதை தடுக்க, நவீன தொழில்­நுட்­பத்தில், சைபர் பாது­காப்பு வச­தி­களை, நிறு­வ­னங்கள் தொடர்ந்து மேம்­ப­டுத்தி வர வேண்டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
பெருகி வரும் புதிய தொழில்­நுட்­பங்­களால், ‘சைபர்’ தாக்­குதல் குறித்த அச்­சு­றுத்­தல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. அதனால், ஒரு நிறு­வனம், 100 சத­வீத சைபர் பாது­காப்பு வச­தி­களை கொண்­டி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை. தற்­போ­தைய பாது­காப்பு கட்­ட­மைப்பை பலப்­ப­டுத்தி, சைபர் தாக்­கு­தலில் இருந்து, உட­ன­டி­யாக மீள்­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­களை செய்து கொள்­வது தான் முக்­கியம்.-குல்ஷன் ராய், தேசிய சைபர் பாது­காப்பு பிரிவின் ஒருங்­கி­ணைப்­பாளர்,தேசிய பாது­காப்பு குழு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)