பதிவு செய்த நாள்
14 ஜன2017
03:39

மும்பை:மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, இ.இ.பி.சி., இந்தியா தலைவர் டி.எஸ்.பாசின் கூறியதாவது:மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வரும், 2017 – 18ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதிச் சலுகைகளுடன் கூடிய, சிறப்பு திட்டத்தை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏற்றுமதி நடைமுறைகளில் உள்ள பல்வேறு இடர்களை நீக்கும் அறிவிப்பும், பட்ஜெட்டில் வெளியாகும் என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள தற்காலிக பாதிப்பில் இருந்து மீளவும், முதலீடுகளை அதிகரிக்கவும், பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும் என, தெரிகிறது. ரொக்க பரிமாற்றத்தை குறைத்து, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க, அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு, அதிகம் முதலீடு செய்வது அவசியம்.அமெரிக்க பொருளாதாரமும், ஒரு சில ஐரோப்பிய சந்தைகளும் எழுச்சி கண்டு வருவது, இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|