பதிவு செய்த நாள்
14 ஜன2017
03:41

புதுடில்லி:‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில் ஈடுபட்டு வரும், பானாசோனிக் நிறுவனம், போட்டியாளர்களை சமாளிக்க, புதிய உத்திகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பானாசோனிக் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவின் தலைமை செயல் அதிகாரி, மனிஷ் சர்மா கூறியதாவது:எங்கள் நிறுவனம், ஸ்மார்ட் போன் சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு, இன்னும் எளிமையான பயன்பாட்டை தர, புதுமையான மொபைல் அப்ளிகேஷன்களை, அடுத்த, 2 – 3 மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலம், போட்டியாளர்களின் சாதனங்களில் இருந்து, எங்கள் மொபைல் போன்கள் தனிப்பட்ட அடையாளங்களுடன் திகழும். நாங்கள் மொபைல் போன் சந்தையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்தான் நுழைந்தோம். கடுமையான போட்டி உள்ளதால், மொபைல் போன்களுடன், புதுமையான அப்ளிகேஷன்களையும் இணைத்து வழங்க உள்ளோம். நுகர்வோர்கள், உயர் தரமான பொருட்களையே வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்பதால், மேம்பட்ட வசதிகளுடன் அறிமுகமாகும் எங்கள் மொபைல் போன்களுக்கு, வரவேற்பு அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|