டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்நிகர  லாபம் ரூ.6,778 கோடி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்நிகர லாபம் ரூ.6,778 கோடி ... புதிய தலைவர் என்.சந்­தி­ர­சே­கரன் உறுதி:‘டாடா குழு­மத்தின் 150ஆண்டு கால பாரம்­ப­ரிய பெரு­மையை காப்பேன்’ புதிய தலைவர் என்.சந்­தி­ர­சே­கரன் உறுதி:‘டாடா குழு­மத்தின் 150ஆண்டு கால ... ...
தொழில் துறை உற்பத்தி 4 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2017
03:44

புதுடில்லி:தொழில் துறை உற்­பத்தி, 2016 நவம்­பரில், முந்­தைய நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 5.7 சத­வீ­த­மாக வளர்ச்சி பெற்­றுள்­ளது; இது, 2015 நவம்­பரில், 3.7 சத­வீதம் பின்­ன­டைவைக் கண்­டி­ருந்­தது. கடந்த, 2012 அக்­டோ­பரில், தொழில் துறை உற்­பத்தி, அதி­க­பட்­ச­மாக, 8.4 சத­வீதம் வளர்ச்சி கண்­டி­ருந்­தது. ‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையின் தாக்கம், நவம்­பரில் எதி­ரொ­லிக்­க­வில்லை என்­ப­தையே, இந்த வளர்ச்சி காட்­டு­கி­றது’ என, ஆய்­வா­ளர்கள் தெரி­வித்துள்­ளனர்.
மதிப்­பீட்டு மாதத்தில், தயா­ரிப்பு, மின்­சாரம் ஆகிய துறைகள், முறையே, 5.5 சத­வீதம் மற்றும் 8.9 சத­வீதம் உற்­பத்தி வளர்ச்­சியை கண்­டுள்­ளன. சுரங்கத் துறையின் உற்­பத்தி, 3.9 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது; இது, முந்­தைய அக்­டோ­பரில், 1.07 சத­வீதம் பின்­ன­டைவில் இருந்­தது. மின் துறையின் உற்­பத்தி அதி­க­ரித்­ததால், ஒட்­டு­மொத்த தொழில் துறையின் உற்­பத்தி வளர்ச்சி அதி­க­ரித்­துள்­ளது. கடந்த இரண்­டரை ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, நுகர்வோர் விலை அடிப்­ப­டை­யி­லான சில்­லரை பண­வீக்கம், 2016 டிசம்­பரில், 3.41 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது; இது, நவம்­பரில், 3.63 சத­வீ­த­மாக இருந்­தது.
கடந்த, 2014 மற்றும் 2015 டிச., மாதங்­களில், சில்­லரை விலை பண­வீக்கம், முறையே, 3.27 சத­வீதம் மற்றும் 5.61 சத­வீதம் என்­ற­அளவில் இருந்­தது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை, பழங்கள், காய்­க­றிகள் ஆகி­ய­வற்றின் வரத்து அதி­க­ரிப்பு போன்­ற­வற்றால், மதிப்­பீட்டு மாதத்தில், உணவுப் பொருட்­களின் விலை குறைந்­துள்­ளது. இதன் விளை­வாக, சில்­லரை விலை பண­வீக்கம் குறைந்­துள்­ளது என, ஆய்­வா­ளர்கள் தெரி­வித்து உள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)