தொழில் துறை உற்பத்தி 4 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சிதொழில் துறை உற்பத்தி 4 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி ... சீனாவில் கார்கள் விற்­பனை 2.80 கோடி­யாக அதி­க­ரிப்பு சீனாவில் கார்கள் விற்­பனை 2.80 கோடி­யாக அதி­க­ரிப்பு ...
புதிய தலைவர் என்.சந்­தி­ர­சே­கரன் உறுதி:‘டாடா குழு­மத்தின் 150ஆண்டு கால பாரம்­ப­ரிய பெரு­மையை காப்பேன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2017
03:48

மும்பை:‘‘டாடா குழு­மத்தின், 150 ஆண்டு கால பாரம்­ப­ரிய பெரு­மையை கட்டிக் காப்பேன்,’’ என, டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் புதிய தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட்டு உள்ள, என்.சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள்ளார். டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் கீழ், 40க்கும் அதி­க­மான டாடா நிறு­வ­னங்கள் செயல்­பட்டு வரு­கின்­றன.
கடந்த ஆண்டு, அக்., 24ல், டாடா சன்ஸ் தலைவர் பத­வி­யி­லி­ருந்து, சைரஸ் மிஸ்­திரி நீக்­கப்­பட்­டதை அடுத்து, தற்­கா­லிக தலை­வ­ராக, ரத்தன் டாடா பொறுப்­பேற்றுக் கொண்டார். அப்­போது, ‘நான்கு மாதங்­க­ளுக்குள், புதிய தலைவர் நிய­மிக்­கப்­ப­டுவார்’ என, அவர் தெரி­வித்­தி­ருந்தார். அதன்­படி, டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் தலை­வ­ராக, டி.சி.எஸ்., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், டாடா கன்­சல்­டன்சி சர்­வீசஸ் நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி, என்.சந்­தி­ர­சே­கரன் தேர்வு செய்­யப்­பட்டு உள்ளார். ஏழு லட்சம் கோடி ரூபாய் விற்­று­முதல் கொண்ட, டாடா குழு­மத்தின் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக, பார்சி அல்­லாத ஒருவர், அதுவும் தமி­ழ­கத்தைச் சேர்ந்­தவர், இந்த பொறுப்பை ஏற்க உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
இது குறித்து, என்.சந்­தி­ர­சே­கரன், செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:டாடா சன்ஸ் இயக்­கு­ன­ராக என்னை நிய­மித்து, அதன் தலைவர் பத­வி­யையும் எனக்கு வழங்­கி­யி­ருப்­பது பெரு­மை­யா­கவும், அதே சமயம், மிகுந்த பொறுப்­பு­ணர்­வையும் அளித்­துள்­ளது. என் மீது நம்­பிக்கை வைத்த டாடா சன்ஸ் இயக்­குனர் குழு, தலைவர் ரத்தன் டாடா ஆகி­யோ­ருக்கு நன்றி தெரி­விக்­கிறேன். உயர்ந்த பண்­பாடு, நன்­நெ­றி­களை பின்­பற்றி, இந்­தியா மட்­டு ­மின்றி, உலக மக்­களின் மன­திலும் தனி இடம் பிடித்­துள்ள, டாடா குழு­மத்தின் பாரம்­ப­ரிய மாண்பை கட்டிக் காப்பேன். எவ­ருக்கும் சுல­பத்தில் கிடைத்­தி­ராத இப்­ப­த­விக்கு, பல­த­ரப்­பட்ட தலைமை பண்­பு­களும், அனை­வ­ரையும் அர­வ­ணைத்து செல்லும் அணு­கு­மு­றை­களும் தேவை. அவற்றை, வெகு விரைவில் நான் வளர்த்துக் கொள்வேன் என, நம்­பு­கிறேன்.
அனைத்து தரப்­பி­ன­ருடன் இணைந்து செயல்­பட்டு, குழு­மத்தின் வளர்ச்­சிக்கு பாடு­ப­டுவேன்.இவ்­வாறு அவர் கூறினார். டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் புதிய தலைவர் பத­விக்கு, டாடா குழு­மத்தைச் சேர்ந்த, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறு­வன தலைமை செயல் அதி­காரி ரால்ப் ஸ்பெத், யூனி­லிவர் நிறு­வன தலைமை செயல் அதி­காரி ஹரிஷ் மன்­வானி, ஸ்மித் குழு­மத்தின் தலைமை செயல் அதி­காரி ஜார்ஜ் பக்லே உள்­ளிட்ட ஐவரை, தேர்வுக் குழு பரி­சீ­லித்­தது. அவர்­களில், டி.சி.எஸ்., தலைமை செயல் அதி­கா­ரி­யான, என்.சந்­தி­ர­சே­கரன் தேர்வு செய்­யப்­பட்டார். இவர், பிப்., 21ல், டாடா சன்ஸ் நிறு­வ­னத்தின் தலை­வ­ராக பொறுப்­பேற்க உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)