பதிவு செய்த நாள்
15 ஜன2017
03:57
சாங்காய்:சீனாவில், மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஆண்டில், 2.80 கோடி கார்கள் விற்பனையாகி உள்ளன.உலகில், இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, கார் உள்ளிட்ட மோட்டார் வாகன துறையில், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டில், சீனாவில், கார்கள் விற்பனை, 14 சதவீதம் அதிகரித்து, 2.80 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2015ல், சர்வதேச மந்த நிலையால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது. இதனால், உள்நாட்டில், மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கவில்லை. இதையடுத்து, சீன அரசு, பொருட்கள் வாங்குவதற்கான வரியை குறைத்தது. இதனால், கடந்த ஆண்டில், வாகனங்கள் விற்பனை நன்கு இருந்தது. குறிப்பாக, மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 2016ல், 2.80 கோடி கார்கள் விற்பனையாகி உள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் கார்கள் 38.70 லட்சம்; போர்டு நிறுவனத்தின் கார்கள் 12.70 லட்சம்; போக்ஸ்வேகன் கார்கள், 39.80 லட்சம் என விற்பனை ஆகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|