கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள்கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள் ... இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் முத­லீ­டு­களின் பலனை ஆய்வு செய்­யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
03:03

முத­லீ­டு­களின் செயல்­பாட்டை ஆய்வு செய்து, அவற்றில் மாற்றம் தேவையா என, தீர்­மா­னிக்க ஆண்டின் துவக்கம் சரி­யான தருணம்.
சரி­யான நிதி சாத­னங்­களை தேர்வு செய்து முத­லீடு செய்­வ­தோடு நின்­று­வி­டக்­கூ­டாது. முத­லீட்டின் செயல்­பாடு குறித்து அவ்­வப்­போது பரி­சீ­லனை செய்­வது அவசியம். அப்­போது தான் முத­லீட்டின் பலன் இலக்­கு­க­ளுக்கு ஏற்ப அமைந்­தி­ருக்­கி­றதா என கண்­ட­றிய முடியும். இதற்­கான ஏற்ற தரு­ம­ண­மாக புத்­தாண்டு அமை­கி­றது. ஆண்டின் துவக்­கத்தில் கடந்த ஆண்டு செயல்­பாட்டை ஆய்வு செய்­வதன் மூலம், முத­லீட்டு உத்­தி­களில் மாற்றம் தேவையா என்றும், மேலும் மேம்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யுமா என்றும் அறிந்து கொண்டு அதற்­கேற்ப திட்­ட­மி­டலாம்.
முத­லீடு மற்றும் நிதி செயல்­பா­டு­களை பரி­சீ­லனை செய்­வதை நிதி இலக்­கு­களில் இருந்து துவங்­கலாம். உங்­க­ளுக்கு என நிதி இலக்­கு­களை வகுத்­திக்­கொண்­டி­ருந்தால் அவை குறித்து பரி­சீ­லிக்­கவும். நீண்ட கால இலக்­குடன் மேலும் சில குறு­கிய கால இலக்­கு­களை சேர்க்க வேண்­டுமா என யோசி­யுங்கள். இலக்­கு­களை ஆய்வு செய்த பிறகு, முத­லீ­டு­களின் செயல்­பாடு அவற்­றுக்கு ஏற்ப இருக்­கின்­ற­னவா என பார்க்க வேண்டும். இலக்­கு­க­ளுக்கு அளிக்க வேண்­டிய முன்­னு­ரிமை குறித்தும் யோசிக்க வேண்டும். உங்­க­ளிடம் உள்ள வளங்கள் சரி­யான முறையில் முத­லீடு செய்­யப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்து கொள்ள இது உதவும்.
சேமிப்புஉங்கள் இலக்­கு­க­ளுக்­கான சேமிப்பு சாத்­தி­ய­மாக வேண்டும் என்றால் உங்­க­ளுக்கு என பட்ஜெட் மிகவும் அவ­சியம். உங்கள் வரவு செல­வு­களை ஆய்வு செய்­யுங்கள். சேமிப்பு இலக்­கிற்கு ஏற்ப செல­வு­களை மாற்றி அமைக்க வேண்­டிய தேவை இருக்­கி­றதா என பாருங்கள். இது­வரை உங்­க­ளுக்­கென பட்ஜெட் இல்­லா­விட்டால், அதை வகுத்­துக்­கொள்ள இது சரி­யான தருணம்.
கடனில் கவனம்சேமிப்­புக்கு அடுத்­த­ப­டி­யாக கடன் நிர்­வா­கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பெற்­றுள்ள கடன்­களை ஆய்வு செய்­யுங்கள். கடன் சுமையை குறைப்­பது தான் உங்கள் இலக்­காக இருக்க வேண்டும். மேலும், கடனை அதி­க­மாக்­கு­வது நல்­ல­தல்ல. கடன்­க­ளுக்­காக நீங்கள் செலுத்த வேண்­டிய தொகை வரு­வாயில், 40 சத­வீ­தத்­திற்கு மிகாமல் இருப்­பது நல்­லது.
காப்­பீடுஎந்த நிதி திட்­ட­மி­டலும் காப்­பீடு இல்லாமல் நிறைவு பெறு­வ­தில்லை. ஆயுள் காப்­பீடு என்­பது உங்கள் தற்­போ­தைய வருவாய், செலவு மற்றும் இலக்­கு­க­ளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். எனவே, ஆயுள் காப்­பீட்டு நிலையை அவ்­வப்­போது ஆய்வு செய்­வது அவ­சியம். போது­மான காப்­பீடு இருக்­கி­றதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். மருத்­துவ காப்­பீட்­டிலும் கவனம் தேவை. வீட்டு காப்­பீடு போன்­ற­வற்­றையும் பரி­சீ­லிக்க வேண்டும்.
அவ­சர கால நிதிஉங்­க­ளிடம் எப்­போதும் நெருக்­க­டி­களை சமா­ளிப்­ப­தற்­கான அவ­சர கால நிதி இருப்­பது அவ­சியம். மூன்று முதல் ஆறு மாதங்­க­ளுக்­கான அடிப்­படை தேவை­களை சமா­ளிக்க கூடிய நிதி கைவசம் இருப்­ப­தையே இவ்­வாறு குறிப்­பி­டு­கின்­றனர். உங்கள் செல­வுகள் மற்றும் பொறுப்­பு­க­ளுக்கு ஏற்ப இந்த நிதி போது­மா­னதா என ஆய்வு செய்­வது நல்­லது.
முத­லீடு ஆய்வுநீங்கள் செய்­துள்ள முத­லீட்டின் பலன்கள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். அவற்றின் செயல்­பாடு நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப அமைந்­துள்­ளதா என பார்த்து மாற்றம் அல்­லது மேம்­பாடு தேவையா என தீர்­மா­னிக்­கவும். ஏதேனும் போதாமை இருந்தால் அவற்றை சரி செய்யும் வழி­களை நாட வேண்டும்.
ஆவ­ணங்கள்நிதி விஷ­யங்கள் தொடர்­பான ஆவ­ணங்கள் அனைத்தும் ஓரி­டத்தில் இருப்­பது நல்­லது. சொத்து பத்­தி­ரங்கள், காப்­பீடு பாலி­சிகள், வங்கி கணக்கு அறிக்கை, வரிச் சான்­றி­தழ்கள், பில்கள் இவற்றில் அடங்கும். தேவை­யில்­லாத பில்கள் மற்றும் காலா­வ­தி­யான அறிக்­கை­களை அகற்றி விடலாம். இதன் மூலம் குழப்­பத்தை குறைக்­கலாம். முடிந்தால் இவற்றை டிஜிட்டல் மய­மாக்கி பரா­ம­ரிக்­கலாம். இதற்கு அரசின், ‘டிஜி லாக்கர்’ வச­தி­யையும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். முத­லீ­டு­களுக்­கான நாமினி நிய­மனம் போன்­றவை குறித்தும் ஆய்வு செய்­யுங்கள். ஆண்டு துவக்­கத்தில் நிதி ஆய்வு மேற்­கொண்டு, அதற்­கேற்ப மாற்­றங்­களை செய்து சரி­யாக திட்­ட­மிட்டால், நிதி இலக்கை நோக்கி தடை­யில்­லாமல் முன்­னே­றலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)