பதிவு செய்த நாள்
18 ஜன2017
03:02
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச அளவில், பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில், உயர் பொறுப்பில் உள்ளோரிடம், முதலீடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.அதில், பெரும்பான்மையானோர், அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தெரிவித்து உள்ளனர்.அதே சமயம், இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா, ரஷ்யா ஆகிய நாடுகளில் முதலீடு செய்வதற்கு ஆதரவு தெரிவித்தோர் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, குறைவாக இருந்தது.அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் கண்டு வருவதும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார மையமாக, ஜெர்மனி உருவெடுத்துள்ளதும், முதலீடுகளை ஈர்க்க காரணமாக உள்ளன.அரசியல் சூழல்; அன்னிய செலாவணியின் ஏற்றத் தாழ்வு; சந்தை நிலவரம் போன்ற அம்சங்கள் காரணமாக, பிற நாடுகளில், முதலீட்டிற்கான ஆர்வம் குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|