பதிவு செய்த நாள்
18 ஜன2017
03:05
புதுடில்லி : ‘உள்நாட்டு சுற்றுலா மற்றும் பயண திட்டங்களில் ஈட்டப்படும் அன்னிய செலாவணிக்கு, சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்’ என, சுற்றுலா மற்றும் பயணச் சேவை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.இது குறித்து, காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, அனில் கந்தல்வால் கூறியதாவது:இந்தியாவில், அதிகளவில் அன்னிய செலாவணி ஈட்டித் தரும் துறைகளில், சுற்றுலா மற்றும் பயணச் சேவைகள் துறை, முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது; உலகளவில், மொத்த சேவைகள் வர்த்தகத்தில், மூன்றில் ஒரு பங்கு என்றளவில் உள்ளது.இவற்றை கருத்தில் கொண்டு, மத்திய பட்ஜெட்டில், சுற்றுலா மற்றும் பயணச் சேவைகள் துறைக்கு, வரிச்சலுகைகள் வழங்க வேண்டும்.குறிப்பாக, உள்நாட்டு சுற்றுலாவில், பயண நிறுவனங்கள் ஈட்டும் அன்னிய செலாவணி வருவாய்க்கு, சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.தற்போது, உள்நாட்டில் சேவை வரி செலுத்தி விட்டு, வெளிநாடு செல்லும் ஒருவர், அங்கும், ஜி.எஸ்.டி., அல்லது ‘வாட்’ வரி செலுத்தும் நிலை உள்ளது. இந்த இரட்டை வரி முறையை நீக்கி, ஒரே வரி விதிப்பை அமல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவிற்கு உட்பட்ட பயணத்திற்கு மட்டுமே, சேவை வரி அல்லது ஜி.எஸ்.,டி., வரி விதிக்க வேண்டும்.ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, வரும் ஜூலை முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கு முன், அண்டை நாடுகளில் உள்ள, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு விபரங்களை, மத்திய அரசு ஆராய வேண்டும். அவற்றின் அடிப்படையில், சுற்றுலா மற்றும் பயணத் துறைக்கு, சரக்கு மற்றும் சேவை வரியை நிர்ணயிக்க வேண்டும்.சுற்றுலா துறைக்கான வரிச் சட்டங்களை எளிமையாக்குவதற்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் மூலம், சேவை வரி தொடர்பான வழக்குகள் அதிகரிப்பதை குறைக்க முடியும்.ஜி.எஸ்.டி., அமலுக்கு பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, சுற்றுலா துறை வரி விதிப்பு சார்ந்த செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘ஒளிரும் இந்தியா’ மத்திய அரசு, ‘ஒளிரும் இந்தியா’ பிராண்டை மேலும் வலுப்படுத்த, ஏராளமான சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு, சாலை, ரயில் வசதி அவசியம். அது தொடர்பான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மிகச் சிறந்த முறையில் விடுமுறையை கழிக்க, இந்தியாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன என்பதை, வலிமையான பிரசார உத்திகளால், உலகளவில் பரப்ப வேண்டும். இதனால், இந்திய சுற்றுலா துறை மேலும் சிறப்பான வளர்ச்சி காணும்.மத்திய பட்ஜெட்டில், சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாதவன், தலைவர், தாமஸ் குக் இந்தியா குழுமம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|