பதிவு செய்த நாள்
21 ஜன2017
05:57

புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த, ஆக்சிஸ் பேங்க், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 73 சதவீதம் சரிந்து, 580 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 2,175 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், இதே கால ஒப்பீட்டில், வங்கியின் மொத்த வருவாய், 12 ஆயிரத்து, 531 கோடி ரூபாயில் இருந்து, 14 ஆயிரத்து, 501 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதர வருவாய், 2,338 கோடி ரூபாயில் இருந்து, 3,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஒன்பது மாதங்களில், ஆக்சிஸ் பேங்கின் நிகர லாபம், 60 சதவீதம் குறைந்து, 2,454 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 6,069 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. நிகர லாபம் குறைந்ததற்கு, வங்கியின் வசூலாகாத கடன் அளவு அதிகரித்ததே காரணம் என, கூறப்படுகிறது.இவ் வங்கியின் மொத்த வாரா கடன், நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில், 5.22 சதவீதம் என்றளவை எட்டியிருக்கிறது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1.68 சதவீதமாக குறைந்து இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|