ஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு முடிவுஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு ... ... புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பழக்­கங்­களை மாற்றிக்கொள்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
07:26

நாம் வாழ்வில், பழக்­கங்கள் மிகவும் முக்­கி­ய ­மா­னவை எனக்­கூறும், ஜெர்மி டீன், முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பழக்­கங்­களை உரு­வாக்கி கொள்ளும் வழி­க­ளையும், பல­ன்­அளிக்­காத பழக்­கங்­களை மாற்றிக் கொள்ளும் வழி­க­ளையும், ‘மேக்கிங் ஹாபிட்ஸ், பிரேக்கிங் ஹாபிட்ஸ்’ புத்­த­கத்தில் விவ­ரிக்­கிறார்.
பழக்­கங்கள், நம் வாழ்க்­கையில் முக்­கிய பங்­காற்­று­கின்­றன. எல்லா விஷ­யங்கள் தொடர்­பா­கவும் முடி­வெ­டுக்­காமல், பல­வற்றை தானாக செய்து கொள்ள வழி செய்­வதன் மூலம், அவை மூளைக்கு ஓய்­வ­ளிக்­கின்­றன. தினமும் தவ­றாமல் செய்யும் விஷ­யங்­களை கூட, யோசித்து முடி­வெ­டுக்க வேண்டும் என்றால், எத்­தனை களைப்­பாக இருக்கும் என, யோசித்துப் பாருங்கள். பழக்­கங்கள், இவற்றில் இருந்து விடு­தலை அளிக்­கின்­றன.எந்த ஒரு விஷ­யத்­தையும் அதிகம் யோசிக்­காமல், தானாக செய்யும் இந்த தன்­மையால் தான், பழைய பழக்­கத்தை மாற்றிக் கொள்­வது, புதிய பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வது என, இரண்­டுமே மிகவும் கஷ்­ட­மா­ன­தாக இருக்­கி­றது. லண்டன் கல்­லுா­ரியில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று, பழக்­கங்­களை உரு­வாக்கிக் கொள்ள தேவைப்­படும் முயற்­சியை உணர்த்­து­கி­றது.
தினமும் காலை, உண­வுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ள, 20 நாட்கள் தேவை. இதே கொஞ்சம் கடி­ன­மான செயல்­களை செய்ய, கூடு­தல அவ­காசம் வேண்டும். உதா­ர­ண­மாக, தினமும், 50 பஸ்கி எடுக்­கப் ­ப­ழக, 84 நாட்கள் தேவை.புதிய பழக்­கத்தை உண்­டாக்கிக் கொள்ள சிறந்த வழி, அதற்கும், குறிப்­பிட்ட சூழ­லுக்கும் ஒரு தொடர்பை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தாகும். இப்­படி செய்­வதன் மூலம், பழக்­கத்தை எளி­தாக ஏற்­ப­டுத்திக் கொள்­ளலாம். ஒரு செயலை செய்­வதன் மூலம் கிடைக்கக் கூடிய பலனை அல்­லது செய்­யாமல் இருப்­பதால் உண்­டாகும் பாதிப்பை, அத­னுடன் தொடர்புபடுத்திக் கொள்­வதன் மூலம் இதை செய்­யலாம். இதை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான உத்­வேகம் என, வைத்துக் கொள்­ளலாம்.
ஒரே வித­மான சூழலில், நாம் ஒரே செயலை செய்­வ­தற்கு பழக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். சொல்­லப்­போனால், இந்த தொடர்பே, பழக்­கங்கள் உரு­வாக ஒரு கார­ண­மாக அமை­கின்­றன. இந்த முறையை, நிதி மற்றும் பணம் தொடர்­பான பழக்­கங்­க­ளுக்கும் பயன்­ப­டுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டு பழக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த விரும்­பினால், 200 ரூபாய்க்கு குறை­வான பொருட்­களை வாங்க வேண்டும் என்றால், நான் ரொக்கப் பணத்தை மட்டும் தான் பயன்­ப­டுத்­துவேன் என்­பது போன்ற கட்­டுப்­பா­டு­களை விதித்துக் கொள்­ளலாம்.
புதிய வீட்­டிற்கு குடி­பெ­யரும் போது அல்­லது புதிய வேலையில் சேரும் போது, சூழ­லு­ட­னான தொடர்பு எந்த அளவு முக்­கியம் என்­பதை, நம்மால் உணர முடியும். அதே போல, நம்­மைச்­ சுற்­றி­யுள்ள சூழல் நம் செயல்­க­ளையும் பாதிக்­கின்­றன. நல்ல பழக்­கங்கள் போலவே, பாதிப்பை ஏற்­ப­டுத்தும் பழக்­கங்­களும் உரு­வா­கின்­றன. ஒவ்­வொரு முறை, அவற்றை நாம் செய்யும் போது அவை மேலும் வலு­வா­கின்­றன. நாம் அவற்றை யோசிக்­கா­மலே செய்­கிறோம் என்­பதால் தான், அவற்றை மாற்றிக் கொள்­வதும் கடி­ன­மாக இருக்­கி­றது. பழக்­கங்­களை சரி­யான முறையில் மேற்­கொள்­வதன் மூலம், மாற்றிக் கொள்­ளலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)