ஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு முடிவுஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு ... ... புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நீங்கள் நல்ல முத­லீட்­டா­ளரா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
07:28

முத­லீட்­டா­ள­ருக்கு தேவை­யான அடிப்­படை அம்­சங்கள் சில இருக்­கின்­றன. இந்த அம்­சங்­களை உண்­மை­யான முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும், நடிப்பு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும் உள்ள முக்­கிய வேறு­பாட்டை விவ­ரிப்­பதன் மூலம், சுவா­ர­சி­ய­மாக தனி­நபர் நிதி வல்­லு­ன­ரான, காரல் ரிச்சர்ட்ஸ் ஒரு கட்­டு­ரையில் முன்­வைத்­துள்ளார். முத­லீட்­டா­ளர்கள் போல், பாவனை செய்­ப­வர்­களை தான், அவர் நடிப்பு முத­லீட்­டாளர் என்­கிறார். இவர்­க­ளுக்கும், நல்ல முத­லீட்­டா­ளர்­க­ளுக்கும் உள்ள முக்­கிய வேறு­பா­டு­களை அறிந்து கொள்­வது, முத­லீடு பற்­றிய தெளிவை கொடுக்கும்.
நடிப்பு முத­லீட்­டா­ளர்கள்
l எப்­போதும் நிதி செய்­தி­களை, நாளி­தழ்­க­ளிலும், தொலைக்­காட்­சி­க­ளிலும் ஆவ­லுடன் பின் தொடர்ந்து கொண்­டி­ருப்பர். இவை எல்­லாமே, தாங்கள் நிதி முடி­வு­களை மேற்­கொள்­வ­தற்­கான முக்­கிய தக­வல்கள் என, நினைத்துக் கொண்­டி­ருப்பர் l ஆட்சி மாற்றம் அல்­லது புதிய கொள்கை முடிவு போன்ற செய்­திகள் மற்றும் அவற்றின் தாக்­கத்தின் அடிப்­ப­டையில், தங்கள் முத­லீட்டு முடி­வு­களை மாற்றிக் கொள்வர்l முத­லீ­டு­களின் செயல்­பாட்டை ஓயாமல் கண்­கா­ணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என, நினைப்பர். ஸ்மார்ட்போன் மூலம், அவற்றின் பலன்­களை பின் தொடர்ந்து கொண்டே இருப்பர்l தங்­களின் முத­லீடு பற்றி, எல்­லா­ரி­டமும் அதிக ஆர்­வத்­துடன் பேசுவர். நுகர்வோர் பழக்கம் தொடர்­பான செய்தி, உலக நிகழ்வின் தாக்கம் போன்­ற­வற்றை ஆத­ரித்து பேசுவர்l எங்கோ நடை­பெறும் ஒரு நிகழ்வு, தங்கள் முத­லீட்டை பாதிக்­குமா என, தொடர்ந்து கவ­லைப்­ப­டுவர்l சந்­தையின் ஏற்ற, இறக்கம் பற்­றியும், அவை தங்கள் முத­லீட்டை பாதிக்கும் விதம் பற்­றியும், முடி­வில்­லாமல் பேசிக் கொண்­டி­ருப்பர்.
உண்­மை­யான முத­லீட்­டா­ளர்கள்
l நிதி செய்­திகள் முக்­கி­ய­மா­னவை என்­பதை அறிந்­தி­ருந்­தாலும், அவற்றின் அடிப்­ப­டையில் மட்டும், முடி­வெ­டுக்க முற்­பட மாட்­டார்கள்l வெளி நிகழ்­வு­க­ளுக்கு மாறாக, தங்கள் வாழ்க்­கையில் நடை­பெறும் நிகழ்­வுகள் அடிப்­ப­டை­யிலேயே, நிதி முடி­வு­களை மேற்­கொள்வர். தங்கள் நிதி இலக்­கு­களை நன்­றாக பரி­சீ­லித்து, அதற்­கேற்ப முத­லீ­டு­களை நாடுவர்l முத­லீட்டு மரம் பலன் தர, அது முதலில் வளர்ந்து மர­மாக வேண்டும் என, பொறு­மை­யாக காத்­தி­ருப்பர். அடிக்­கடி, அதன் வேர் நன்­றாக இருக்­கி­றதா என, பார்க்க மாட்­டார்கள் l உலக பொரு­ளா­தாரம் வேறு; தங்கள் தனிப்­பட்ட பொரு­ளா­தாரம் வேறு என அறிந்­தி­ருப்­ப­துடன், தங்கள் வாழ்க்கை பொரு­ளா­தாரம் குறித்தே, அதிகம் கவனம் செலுத்­துவர்l தங்கள் கட்­டுப்­பாட்டில் உள்ள சேமிப்பு, செலவு பழக்கம், நிதிச் ­சா­த­னத்­திற்­கான கட்­ட­ணங்கள் போன்­றவை குறித்தே, அதிகம் கவனம் செலுத்­துவர். ஏறும் போது வாங்க வேண்டும் என்றோ, இறங்கும் போது விற்க வேண்டும் என்றோ நினைக்­காமல், நிதா­ன­மாக செயல்­ப­டுவர் l ஏற்ற, இறக்கம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்­ளாமல், சந்­தையின் நீண்ட கால பலனை நினைத்து மகிழ்வர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)