ஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு முடிவுஐ.டி., துறை பாதிப்பு; அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்த ‘நாஸ்காம்’ அமைப்பு ... ... புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் புதிய சமை­யல் சாத­னங்­கள்; ஆம்வே இந்­தியா அறி­மு­கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘பேமென்ட்’ வங்­கிகள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
07:29

புதிய வகை வங்­கி­க­ளான, ‘பேமென்ட்’ வங்­கிகள், இந்­திய சூழலில், வங்கிச் சேவைகள் அளிக்­கப்­ப­டு­வதில் பெரும் மாற்­றத்தை கொண்டு வரும் என, எதிர்­பார்க்­கப்­படும் நிலையில், இவை பல்­வேறு சவால்­க­ளையும் எதிர்­கொள்ள உள்­ளன.
பேமென்ட் வங்­கிகள் தான், இப்­போது வங்கித் துறையில் அதிகம் கவ­னத்தை ஈர்க்கும் கருத்­தாக்­க­மாக உள்­ளது. அதிலும், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், ‘மொபைல் வாலட்’ பயன்­பாடு உள்­ளிட்ட, ‘டிஜிட்டல்’ பரி­வர்த்­தனை வசதி அதி­க­ரித்து வரும் நிலையில், பேமென்ட் வங்­கிகள் மீதான எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. பேமென்ட் வங்­கிகள், மொபைல் போனை மைய­மாக கொண்டு செயல்­படும் என்­பதால், இவை டிஜிட்டல் பரி­வர்த்­த­னையை, மேலும் பர­வ­லாக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.பேமென்ட் வங்­கி­களின் நோக்­கமே, அனை­வ­ருக்கும் நிதிச்­சேவை அளிக்கும் இலக்கை நோக்கி முன்­னே­று­வது தான். இந்த நோக்­கத்­து­டனே, ரிசர்வ் வங்கி இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ளது. முதற்­கட்­ட­மாக, 11 நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டன. இந்த வகை வங்­கிகள், வழக்­க­மான வங்­கி­களை போன்­றவை தான் என்­றாலும், அவற்றை விட வரம்­புகள் கொண்­டவை. இவை கடன் வழங்க முடி­யாது மற்றும் கிரெடிட் கார்டு வழங்க முடி­யாது. ஆனால், பணப் பரி­வர்த்­தனை, டிபாசிட் ஏற்பு போன்­ற­வற்றில் ஈடு­ப­டலாம்.
மொபைல் போனே வங்கிபேமென்ட் வங்­கிகள், மொபைல் போனை பிர­தா­ன­மாக கொண்டு செயல்­படும். எனவே, வாடிக்­கை­யா­ளரை பொறுத்­த­வரை, மொபைல் போனே, வங்கி கிளை போல அமையும். இவற்றில் கணக்கு துவக்­கு­வதும் எளி­தாக இருக்கும்; ஆதார் அடை­யாள அட்­டையை காண்­பித்து உறுப்­பி­ன­ரா­கலாம். மொபைல் போன் எண்ணே, வங்கிக் கணக்கு எண்­ணாக அமையும்; மொபைல் போனே, வங்கிக் கணக்கு புத்­த­க­மா­கவும் அமையும். மேலும், இந்த வகை வங்­கிகள், சில்­லரை வர்த்­தக மையங்­களை, தங்கள் பிர­தி­நி­தி­யாக அமர்த்திக் கொண்டு செயல்­பட உள்­ளன. இதனால், பெட்­டிக்­க­டை­களில் கூட, இனி, மொபைல் போன் மூலம் பணப் பரி­வர்த்­தனை செய்­வது சாத்­தி­ய­மாகும். அனு­மதி பெற்ற நிறு­வ­னங்­களில், ஏர்டெல் நிறு­வனம், முதல் பேமென்ட் வங்­கியை துவக்­கி­யுள்­ளது. முதற்­கட்­ட­மாக, ராஜஸ்தான் மாநி­லத்தில், முன்­னோட்ட வடிவில் துவக்­கப்­பட்ட இந்த சேவை, நாட்டின் மற்ற மாநி­லங்­க­ளிலும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.
ஏர்டெல் நிறு­வனம், நாடு முழு­வதும் உள்ள, ஏர்டெல் சில்­லரை வர்த்­தக மையங்கள் வாயி­லாக, இந்த சேவையை வழங்க உள்­ளது. சேமிப்பு கணக்கு டிபா­சிட்­டிற்கு, 7.25 சத­வீத வட்­டியை அறி­வித்­துள்­ளது.அடுத்­த­தாக, ‘பேடிஎம்’ நிறு­வனம், பேமென்ட் வங்­கியை துவக்­கு­வ­தற்­கான தீவிர முயற்­சியில் உள்­ளது. பேடிஎம் பேமென்ட் வங்கி துவங்­கிய பின், ‘பேடிஎம் வாலெட்’ வைத்­தி­ருப்­ப­வர்கள், பேடிஎம் வங்­கிக்கு மாற்­றப்­ப­டுவர் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், இந்­திய அஞ்சல் துறை சார்­பிலும், பேமென்ட் வங்­கிக்­கான பணிகள் முழு வீச்சில் நடை­பெற்று வரு­கின்­றன.
அஞ்சல் துறை பேமென்ட் வங்கி துவக்­கப்­படும் போது, நாடு முழு­வதும் உள்ள அஞ்­ச­ல­கங்­களே, வங்கி கிளை போல செயல்­படும்.கிரா­மப்­பு­றத்தில் சேவைநாட்டின் குக்­கி­ரா­மங்­க­ளுக்கு கூட, வங்கிச் சேவையை கொண்டு செல்ல, இந்த வங்­கிகள் உதவும் என, கரு­தப்­ப­டு­கி­றது. வழக்­க­மாக, வங்­கிகள், கிரா­மப்­பு­றங்­களில் கிளைகள் அமைத்து செயல்­ப­டு­வதில் பல்­வேறு சிக்­கல்கள் உள்­ளன. பேமென்ட் வங்­கிகள், கிரா­மப்­பு­றங்­களில் சேவை அளிக்கக் கூடி­ய­வை­யாக செயல்­படும். இந்த சேவையை பெற, ‘ஸ்மார்ட் போன்’ தான் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற கட்­டா­ய­மில்லை; சாதா­ரண போனிலும் சேவை பெறலாம். முதற்­கட்­ட­மாக, இவை பணப் பரி­வர்த்­தனை மற்றும் டிபாசிட் சேவையை அளிக்க உள்­ளன. வாடிக்­கை­யா­ளர்கள் பணம் செலுத்­து­வது, பில் தொகை செலுத்­து­வது போன்ற­வற்­றுக்கும் இவற்றை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.
பயண டிக்கெட் போன்­ற­வற்­றையும் வாங்க முடியும். கணக்கில் இருந்து பணம் ரொக்­க­மாக எடுக்­கப்­படும் போது, சிறி­த­ளவு கட்­டணம் செலுத்த வேண்­டி­இருக்கும். ஏர்டெல் நிறு­வனம் இதை, 0.65 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ளது.வங்கிச் சேவை பெற முடி­யாமல் இருக்கும் மக்­க­ளுக்கு, வங்கிச் சேவையை கொண்டு செல்­வதில், பேமென்ட் வங்­கிகள் முக்­கிய பங்­காற்றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும், இவற்றின் செயல்­பா­டு­க­ளுக்கு வரம்­புகள் உள்­ளதால், லாப­மீட்ட இவை புது­மை­யான முறையில் செயல்­பட வேண்­டி­யி­ருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)