பதிவு செய்த நாள்
23 ஜன2017
23:55

சியோல் : சாம்சங் நிறுவனம், அதன், ‘கேலக்ஸி நோட் – 7’ மொபைல் போன்கள் தீ பிடித்ததற்கு, பேட்டரி குறைபாடே காரணம் என, தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் மொபைல் வர்த்தக பிரிவின் தலைவர், கோ டாங்ஜின் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான, சாம்சங் எஸ்.டி.ஐ., தயாரித்த பேட்டரியே, ‘கேலக்ஸி நோட் – 7’ மொபைல் போன் தீ பிடித்ததற்கு காரணம். எங்கள் நிறுவனம் மற்றும் வெளி நிறுவனங்கள் மூலமான ஆய்வில், இது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நிறுவனத்தை சேர்ந்த, 700 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் மூலமாக, 2 லட்சம் போன்கள் மற்றும் 30 ஆயிரம் பேட்டரிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பேட்டரி குறைபாடே காரணம் என, முடிவுக்கு வந்துள்ளோம். அந்த பேட்டரியின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாதிரியான பிரச்னைகள், இனி வரும் காலங்களில் ஏற்படாது என, உறுதி அளிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக, கவலை அடைகிறோம்; மன்னிப்புக் கேட்டு கொள்கிறோம். கடந்த, 2016 செப்டம்பருக்கு பின், 25 லட்சம், ‘கேலக்ஸி நோட் – 7’ மொபைல் போன்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|