பதிவு செய்த நாள்
27 ஜன2017
04:23
புதுடில்லி : இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த, அசோக் லேலண்டு, பஸ், வர்த்தக வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 185.88 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 213.70 கோடி ரூபாயாக இருந்தது.
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 8.18 சதவீதம் உயர்ந்து, 4,366.35 கோடி ரூபாயில் இருந்து, 4,723.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில், அந்நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை, 25 ஆயிரத்து, 285 ஆக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 23 ஆயிரத்து, 176 ஆக குறைந்திருந்தது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் தாசரி கூறுகையில், ‘‘மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டு, தொழில் துறைக்கு பெரும் சவாலாக இருந்தது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|